வெள்ளி, 29 டிசம்பர், 2017

sri vaikunta ekadasi ஶ்ரீ வைகுண்ட ஏகாதசி நேரடி ஒளிபரப்பு 2017-18



ஶ்ரீவைகுண்ட ஏகாதசி தரிசனம்







புதிய தலைமுறை தொலைக்காட்சி


News7 tamil

                                                                              Sunnews



Jaya plus tv




                                           
                                         Thirupathi thirumalai ttd Chennal



செவ்வாய், 19 டிசம்பர், 2017

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நேரடி ஓளிபரப்பு 19/12/2017 Thirunallar Saneeswaran Temple

       
       திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நேரடி ஓளிபரப்பு 19/12/2017
   

Thirunallar Saneeswaran Temple live



ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்  
 whats app  0091-8939791843
aanmeegathagavalgal@gmail.com


                     Thanthi tv

        

சனி, 2 டிசம்பர், 2017

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் நேரடி ஓளிபரப்பு live telecast on thiruvannamalai thiru karthikai deepam



திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப நேரடி ஓளிபரப்பு

ஶ்ரீ வள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்
0091-8939791843











                                                தந்தி டிவி



                                                          news 7 tamil



                                    Jaya plus live







                                      DD Pothigai


                     https://www.ddpodhigai.org.in/live.html









பரணி தீபம் bharani deepam திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 02/12/2017





திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் பத்தாம நாள் நிகழ்வு 
தீரு பரணி தீப தரிசனம்
நன்றி திரு பாலாஜி 

ஆன்மீகதகவல்கள் 


புதன், 25 அக்டோபர், 2017

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நேரடி ஓளிபரப்பு காண Live telecast thiruchendur surasamharam 2017



திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நேரடி ஓளிபரப்பு காண 
Live telecast thiruchendur surasamharam
2017

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843
aanmeegathagavalgal@gmail.com
whats app  0091-8939791843


அரோகரா


பொதிகை தொலைக்காட்சி


















புதன், 2 ஆகஸ்ட், 2017

ஆடிப்பெருக்கு சிறப்பு மற்றும் இல்லத்தில் வழிபாடு செய்ய

ஆடிப்பெருக்கு சிறப்பு மற்றும் இல்லத்தில் வழிபாடு செய்ய






                                           தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.

வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை: காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843
aanmeegathagavalgal@gmail.com

காவேரிக்கு பெருமாள் தரும் சீர்வரிசை: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.









காவிரியில் ராமன்: ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும் என்று கூறினார். அதன்படி ராமச் சந்திரன் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மங்களச் சரடு: தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843
aanmeegathagavalgal@gmail.com

ஆடிப்பெருக்கு வந்தாச்சு: தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி18ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத்தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கன்று, வீட்டில் கொடிவகைகளான அவரை, பீர்க்கு, புடலை போன்ற பயிர்க்குழி போடுவதும் உண்டு. நகை, பொருட்கள் வாங்கவும் நல்லநாள்.

நகை வாங்க நல்ல நாள்: அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

ரங்கநாதன் தங்கச்சி: காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப் படுகிறாள். இந்நாளில்,சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோயிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார்.  அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொலைக்காட்சி tirumala tirupathi live darshan

திருமலை திருப்பதி svbc TTD tirumala tirupathi live darshan



ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்
whats app group 0091-8939791843
aanmeegathagavalgal@gmail.com




Namo narayana naya



கருட பஞ்சமி நாச்சியார் கோவில் கல் கருடன் தரிசனம்

கருட பஞ்சமி நாச்சியார் கோவில் கல் கருடன் தரிசனம்


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். 

நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர். 

ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. 


இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார். இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது.

அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.
















 நாச்சியார் கோவில்!







கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.
   திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
   கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.


   கருவறையில் பெருமாளோடு, பிரம்மா, ப்ரத்யும்னன்,பலராமன், அநிருத்தன்,புருஷோத்தமன் ஆகிய ஐவரும் உடன் அருள்பாலிக்கின்றனர்.   ஒரு சமயம்மேதாவி என்ற முனிவர்ஒருவர்திருமகள் தனக்கு மகளாகவும்,ஸ்ரீமன் நாராயணன் தனக்குமருமகனாகவும் அமைந்திட வேண்டும்என விரும்பி தவம் செய்தார்அவரதுவிருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டும்இவ்வுலகோருக்குநாரணின் பஞ்சவியூக திவ்யதரிசனத்தை காண்பித்திட வேண்டியும்,திருமகள் குழந்தை உருவெடுத்துஇத்தலத்தில் அவதரித்தார்அழகேயானஅந்த குழந்தையை முனிவர் எடுத்துவளர்க்கலானார்குழந்தையும் திருமணபருவம் எட்டியதுஅச் சமயம்நாராயணன்சங்கர்ஷணன்,பிரத்யும்னன்அநிருத்தன்சாம்பன்மற்றும் வாசுதேவன் என தனதுபஞ்சவீயூகத் தோற்றமான ஐந்துருகொண்டு திருமகளை தேடி இத் தலம்வந்தடைந்தார்.அப்போது கருடாழ்வார் லட்சுமி தேவி இங்கு வஞ்சுளவல்லியாக வளர்வதை அவர்களிடம் தெரிவித்தார்.முனிவரின் ஆசிரமத்தில் திருமகள்வளர்வதை அறிந்தார்தனதுஐந்துருவில் ஆசிரமம் சென்றார்.முனிவர் வந்தோர்க்கு அமுது படைத்தார்.வாசுதேவன் கை அலம்ப செல்கையில்,முனிவரின் மகளாய் வளரும்திருமகளின் கரம் பிடித்தார். 
திருமகள் அலறமுனிவர் அங்கு வர,திருமால் தனது ஐம்பொன் திருமேனிகாட்டினார்முனிவரிடம் " முனிவரே,உமது தவம் பலிக்கவே யாம் இந்தநாடகம் நடத்தினோம்". என்றார்தன்தவம் பலித்த மகிழ்ச்சியில் முனிவர்ஐயனிடம், " பெருமானேஎனக்கு நீர்தரிசனம் தந்தது போல் இத் தலத்தில்யாவரும் தரிசிக்கும் வண்ணம்என்றென்றும் அருள்புரிய வேண்டும்.எனது மகளாய் வளர்ந்தவஞ்சுளவல்லியின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படவேண்டும்இத் தலம்வந்து உம்மை சேவிப்பவர்அனைவருக்கும் முக்தி தர வேண்டும்".என வரங்கள் கேட்டார்பரந்தாமனும்அவ்வாறே ஆகட்டும் எனக் கூறிமுனிவருக்கு காட்சி தந்தகோலத்திலேயே இத் தல கருவறையில்அனைவருக்கும் காட்ச்யருள்கிறார்.இத்தலம் வந்து சேவிப்போருக்கு பெரும்பேறு அளிக்கிறார். பின்னர் பெருமாள் வஞ்சுளவல்லி திருமணம் நடந்தேறியது. பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும்  நாச்சியார் கோவிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை.

   இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும். இவ்வாறுஏன் நடைபெறுகின்றதுஒரு விளக்கம்பெருமாள் மேதாவி முனிவருக்குகொடுத்த வரம்தாயார் அன்னவாகனத்தில் எழுந்தருளுகின்றாள்அன்னமோ நளினமான பறவை,பெருமாளோ கருடனில்எழுந்தருளுகின்றார்கருடன் பலம்மிகுந்த அதே சமயம் வேகமாகசெல்லக்கூடிய பறவைஎனவே கருடன்அன்னத்தின் பின்னே செல்லவேண்டுமல்லாவாஎனவே கல்கருடனின் எடை கூடிக்கொண்டேசெல்கின்றதுஆகவே இப்போதும்தாயாருக்கு முதலிடம் .இந்த கருடனில் இன்னொரு சிறப்பு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது ஆகும். எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.
 நாச்சியார் கோயில் "கருட சேவை"மிகப் பிரசித்தம்மிக விஷேசம்.ஆண்டாளின் தகப்பனாரனபெரியாழ்வார் இவரது சொரூபமே .இவருக்குரிய கஸ்தூரிகுங்குமப்பூ,புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழைஇலையில் கலந்து இவரதுதிருமேனியில் சாற்றினால்,சாற்றுவோர் அனைத்து வித இஷ்டசித்திகளையும் பெறுவர்இவருக்குபட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்தநினைத்தவை நடந்திடும்ஆடி மாதசுக்கில பஞ்சமி திதியில் இவரைவணங்க நன் மகப் பேறு கிடைக்கும்.மணமாகாததிருமணம் தடை பட்டுவரும் கன்னிப் பெண்களுக்குதிருமணம் கை கூடி வரும்இவரதுஜென்ம நட்சத்திரமான சுவாதிநட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பதுமிகச் சிறந்த பலனைத் தரும். 
இவரை நினைத்து வணங்கினால் விஷஜந்துக்களிடமிருந்துமுக்கியமாகபாம்புகளிடமிருந்து காத்தருள்வார்.வியாழக் கிழமைகள் மாலைவேளைகளும்சனிக் கிழமைகள் காலைவேளைகளும் இவரை தரிசனம் செய்யசிறந்த காலங்களாகும். 
   திருமங்கை ஆழ்வாருக்கு சுவாமியே சமாச்ரயணம் செய்து வைத்ததால் ஆழ்வாரால் ‘நம்பி’ என்று மங்களாசாசனம் செய்யப்பட்டவர் பெருமாள்.  இரு கரங்களுடம் எளிமையாக காட்சி தருகிறார். இது ஒரு மாடக் கோயில் ஆகும்.படிகள் ஏறிச்சென்று பெருமாளை சேவிக்கவேண்டும்.
சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களைக்கொண்டதுஇராஜகோபுரம் 5அடுக்குகளும், 76 அடி உயரமும்உடையதுகருவறைக்கு மேல் உள்ளவிமானமும் கோபுரம் போன்றேஅமைந்திருப்பது அரிதானது. (இதேபோன்ற அமைப்பு உள்ள மற்றொருகோவில்திருவல்லிக்கேணிபார்த்தசாரதிப் பெருமாள் கோவில்!).கண்ணன் காடு (கிருஷ்ணாரண்யம்)எனப்படும் ஐந்து தலங்களில் இதுவேஆரம்பத் தலம்மற்றவைதிருச்சேறை,திருக்கண்ணமங்கை,திருக்கண்ணபுரம் மற்றும்திருக்கண்ணங்குடி.
முக்தி அளிக்கும் 12 தலங்களில் ஒன்று.
கோச்செங்கண் என்ற சோழ மன்னன்சிறந்த சிவபக்தன்போரில் தோற்றபோது இங்கு நீராடி தெய்வ வாளினைப்பெற்று எதிரிகளை வென்றான்வைணவ பக்தன் ஆனான்இந்த ஆலயத்தை கட்டுவித்தான் என்ற வரலாறும் உண்டு.

வெள்ளி, 7 ஜூலை, 2017

மகான் ஶ்ரீ ராகவேந்திரர் ஜோதிடர்கள் இடம் தன் ஆயுள் பற்றி கேள்வி?


மகான் ஶ்ரீ ராகவேந்திரர் ஜோதிடர்கள் இடம் தன் ஆயுள் பற்றி கேள்வி?




ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.

""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.

""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.

""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!""மூன்றாமவர் சொன்னார்.

"எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்...
என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்...
பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""




""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார்.

ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.

புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்    0091-8939791843
நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது.

நவாப்பிடம் மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான்.

துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார்.

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அழகு எழில் கொஞ்சும் துங்கபத்திரை நதிக்கரையோரம் அமைந்திருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மடத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் நம் பிரார்த்தனை நிறைவேறுவதோடு மன அமைதியும் கிடைக்கும்.

கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை மாதம் 7ம்தேதி தொடக்கம். JYESTABHISHEKAM SRIRANGAM



 ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்   ஜூலை மாதம் 7ம்தேதி தொடக்கம்

JYESTABHISHEKAM SRIRANGAM


ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843


திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்டாபிஷேகம் (ஆனி திருமஞ்சனம்) மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேக விழா வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்கக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.




7 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சன குடம் எடுத்து வருதல், 9.15 மணிக்கு திருமஞ்சனம் பெரிய சன்னதி சேருதல், 9.45 மணிக்கு அங்கில் தொண்டைமான் மேடு சேருதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல் நடக்கிறது. மேலும் அன்று முழுவதும் பெருமாள் சன்னதியில் மூலவர் சேவை இல்லை. 8-ந்தேதி பெரிய பெருமாள் திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தளிகை எடுத்தல், பகல் 12 மணிக்கு தளிகை அமுது, 12.30 மணிக்கு செய்தல் நடக்கிறது.


ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843

மாலை 4.30 மணிக்கு மேல் பெருமாள் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 14-ந்தேதி ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அதன்படி அன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்க குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு காவிரியில் இருந்து திருமஞ்சனம் குடம் எடுத்து வருதல், 9.30 மணிக்கு திருமஞ்சனம் தாயார் சன்னதி சேருதல், 10 மணிக்கு அங்கில்கள் தாயார் சன்னதி வசந்த மண்டபம் சேருதல், மாலை 4 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல், இரவு 8.30 மணிக்கு மங்களஹாரத்தி நடக்கிறது. அன்று தாயார் சன்னதியில் மூலவர் சேவை இல்லை.







15-ந்தேதி காலை 7 மணிக்கு தளிகை எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு தளிகை அமுது செய்தல், 1 மணிக்கு மங்களஹாரத்தி நடக்கிறது. அன்று மதியம் 3.30 மணி முதல் தாயார் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 21-ந்தேதி சக்கரத்தாழ்வார் மற்றும் காட்டழகிய சிங்கர் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நடக்கிறது. மதியம் 3 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843
மேலும் 7-ந்தேதி நடக்கும் ஜேஷ்டாபிஷேகத்தின் போது உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களை களைந்து திருமஞ்சனம் செய்து, பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மீண்டும் அங்கில்கள் சாற்றப்படும். அன்றைய தினம் மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்படும். 8-ந்தேதி திருப்பாவாடை நிகழ்ச்சியை முன்னிட்டு சந்தனு மண்டபத்தில் அதிக அளவு சாதம் தயாரித்து சன்னதி முன் நிரப்பப்பட்டு நம்பெருமாளுக்கு அமுது செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். 

ஞாயிறு, 25 ஜூன், 2017

Puri jagannath Rath Yatra live telecast temple Car Festival பூரி ஜெகன்நாத் ஆலய தேர் திருவிழா



Puri Rath Yatra   temple Car Festival live telecast

பூரி ஜெகன்நாத் ஆலய தேர் திருவிழா
25-06-2017 
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   


0091-8939791843








அருள்மிகு ஜெகந்நாதர் (பூரி) திருக்கோயில்   மூலவர்:ஜெகந்நாதர் 



 பெயர்:- ஊர்:பூரி மாவட்டம்:பூரி 

மாநிலம்:ஒரிசா 

திருவிழா: இங்கு நடக்கும் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.    

தல சிறப்பு:   இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.        





முகவரி:   அருள்மிகு ஜெகந்நாதர் திருக்கோயில் பூரி - 752001, புவனேஸ்வர், ஒடிசா.   





பொது தகவல்: ஒரு அரண்மனை போன்ற தோற்றத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் சிம்ம வாயில், மேற்கில் வைராக்ய வாயில், வடக்கில் யானை வாயில், தெற்கில் குதிரை வாயில் என நான்கு வாயில்கள் உள்ளன.இவ்வாலயத்தில் சிவன், விநாயகர், ஆஞ்சனேயர், லட்சுமி நாராயணர், மகாலட்சுமி, புவனேஸ்வரி, சூரியன் போன்றோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஜகந்நாதர் ஆலயத்தை சுற்றி 30 கோயில்கள் உள்ளன. ஆஞ்சநேயர், விநாயகர், நவக்கிரங்கள், சூரியநாராயணார், லட்சுமிநாராயணர், கோபிநாதர், ராமச்சந்திரர், பாதாளேசுவரர், நீலமாதர் என்று பல பெயர்களில் சுவாமிக்கு ஆலயங்கள் உண்டு. மீராபாய், ஜயதேவர், சமர்த்த ராமதாஸ், துளசிதாசர், ஹரிதாஸ், ஆகிய பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இங்குள்ள கோபுரம் 713 அடி உயரம் கொண்டது. ஒரிசா மாநிலத்தின் மிகப்பெரிய கோபுரம் இதுதான். இது ராஜகோபுரம் இல்லை. மூலவரின் விமானம் ஆகும்.  

   பிரார்த்தனை 
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள ஜகநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.    

நேர்த்திக்கடன்:    இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன.    


தலபெருமை:

பூரி கடற்கரை கோயில் என்பதால் கடலில் நீராடிய பிறகே கோயிலுக்கு செல்லவேண்டும். கடற்கரையில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடலில் நீராடிவிட்டு முதலில் மார்க்கண்டேஸ்வரரை வணங்க வேண்டும். பின்பு இங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் ஆகியவற்றில் நீராடிய பிறகு ஜெகந்நாதரை தரிசிக்க செல்லலாம். இந்த கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோயிலுக்குள் செல்ல சிங்கவாயில், குதிரை வாயில், யானைவாயில், புலிக்கதவு ஆகிய நான்கு வாசல்கள் உள்ளன. இவற்றை சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாசலும் பிரமிடு போன்ற அமைப்பில் உள்ளது. கருவறையில் ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பலராமன் ஆறு அடி உயரமும், ஜெகந்நாதர் ஐந்தடி உயரமும், சுபத்ரா நான்கடி உயரமும் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் காட்சி தருவார்கள். இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன. காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடக்கும் நிவேதனம் மிக முக்கியமானது. பல பானைகளில் சாதம், குழம்பு, கூட்டு ஆகியவற்றை நிவேதனம் செய்து வெளியே வந்து கொண்டே இருக்கும். அந்த பானைகளை உடைத்து, அதிலுள்ள பிரசாதங்களை விற்பனை செய்துவிடுவார்கள். இந்த சாதத்தை காயவைத்து கடைத்தெருகளில் விற்பனை செய்வதும் வழக்கம். இதுவே இங்கு முக்கிய பிரசாதமாகும். இதை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.


இங்கே ஆண்டுதோறும் அக்ஷதா மாதத்தில் (ஆனி) வளர்பிறை இரண்டாம் நாளில் 21 நாட்கள் தேர்த் திருவிழா நடை பெறுகிறது.  இவ்விழாவில் பயன்படுத்தப்படும் தேர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளது போன்ற நிரந்தரமான தேர்கள் அல்ல. இவை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஒருமுறை வலம் வந்த தேரை மறு உலாவுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மூன்று பெரிய தேர்களை பூரி ஆலயத்தின் சிம்மத்துவார் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குண்டிச்சா தேவி ஆலயம் வரை இழுத்துச் செல்வார்கள். கிருஷ்ணர் இந்திரத்யும்னனிடம் தான் ஆண்டுக்கு ஒன்பது நாட்கள் தான் பிறந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும்; அதன் அடிப்படையிலேயே இந்த விழா நடப்பதாகவும் கூறுகின்றனர். கோகுலத்திலிருந்து கிருஷ்ணர் மதுரா நோக்கிச் செல்வதை இது குறிப்பிடுகிறது.


காலையில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்கள் சிங்க வாயிலின் வழியாக எடுத்துவரப்படுகின்றன. அதிக கனம் வாய்ந்த மர மூர்த்தங்கள் என்பதால் பலர் சேர்ந்து தூக்கி வருகின்றனர். சுமார் எட்டடி உயரம் கொண்ட ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோரின் மூர்த்தங்கள் அவரவர் தேர்களில் வைக்கப்படுகின்றன. கருப்பு நிறமும் பெரிய கண்களும் கொண்ட ஜெகந்நாதர் சாமவேதத்தைக் குறிக்கும் இறைவனாக விஷ்ணு சொரூபமாக விளங்குகிறார். வெண்ணிறமும் தாமரைக் கண்களுடனும் விளங்கும் பலராமர் ரிக் வேதத்தைக் குறிப்பவராக-சிவ சொரூபமாக விளங்குகிறார். மஞ்சள் நிறமும் தாமரைக் கண்களும் கொண்ட சுபத்ரா யஜுர் வேதத்தைக் குறிப்பவளாக சக்தியின் அம்சமாகத் திகழ்கிறாள். தேர்கள் புறப்படத் தயாரானவுடன், ராஜா கஜபதி என்னும் மன்னர் அங்கே வந்து, தங்கத்துடைப்பத்தால் அந்த எல்லையைத் தூய்மைப்படுத்துகிறார். அதன்பின்னர் சவரா வம்சத்தைச் சேர்ந்த தைத்யர்கள். காவலாக வர, ஆயிரக்கணக்கான பக்தர்களால் தேர்கள் இழுக்கப்படுகின்றன. ஊர்வலமாகச் செல்லும் இந்தத் தேர்களுடன் மற்றும் சில கோயில்களின் சிறிய தேர்களும் வந்து சேர்ந்துகொள்கின்றன. வேத மந்திரம் ஓத பக்திப் பாடல்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடைபெறுகிறது இவ்விழா.


ஒன்பது நாட்கள் அந்தக் கோயிலில் தங்கி இருக்கும் இந்த தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நாள், பகுதா யாத்ரா எனப்படும் திரும்பி வரும் பயணம் நடக்கிறது. நண்பகல் நேரத்தில் சிங்கத்வார் என்னும் இடத்தை அடையும் தேர்கள் அங்கேயே தங்குகின்றன. இறை வடிவங்களுக்கு ராஜ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஜெகந்நாதருக்கு தங்கக் கைகள் பொருத்தப்படுகின்றன. தங்கத்தாலான சங்கும் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார் இறைவன். கனாவேஷா எனப்படும் இது ஏகாதசி திருக்காட்சியாகும். மறுநாள் துவாதசியன்று மூவரையும் பூரி ஆலயத்துக்குள் கொண்டு சென்று, நான்கடி உயரமும் 13 அடி அகலமும் 16 அடி நீளமும் கொண்ட ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள். இவர்களை பக்தர்கள் வலம் வந்து வணங்கலாம். இத்துடன் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் புகழ் வாய்ந்த தேரோட்டம் நிறைவு பெறுகிறது. இவ்விழாவைக் காணும் பக்தர்கள் நூறாண்டுகள் இவ்வாலய இறைவனை வணங்கிய பயனைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆதிசங்கரர் இராமானுஜர், ஸ்ரீ மாத்வர் போன்றவர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள். பஜனை சம்பிரதாயத்தை, வட இந்தியாவில் பரப்பும் பூரிஜகந்நாதரின் கோயில் கடைசி காலத்தில், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஸ்ரீஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சிருங்கேரி மடம் இங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.


ஜெகந்நாதர் தேர்: நந்திகோஷ் அல்லது கருடத்வஜா என்று அழைக்கப்படும் ஜெகந்நாதரின் தேர் 45 அடி உயரம் கொண்டது. 16 கலைகளைக் குறிக்கும் வண்ணம் 16 சக்கரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேரோட்டி தாருகா எனப்படுகிறார். (மரவடிவம்). தேரை இழுக்க உதவும் வடத்திற்கு சங்கசூடா என்று பெயர். சிவப்பு மற்றும் நீல நிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.


பலராமர் தேர்: இது தலத்வஜ் எனப்படுகிறது. 44 அடி உயரம் கொண்டது. 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வண்ணம் 14 சக்கரங்களைக் கொண்டது. நான்கு குதிரைகளாக நான்கு வேதங்கள். வாசுதேவரால் காக்கப்படும் இந்தத் தேரின் சாரதியாக இருப்பவர் மாதவி. தேர் வடத்திற்கு வாசுகி என்று பெயர். சிவப்பு மற்றும் நீலநிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.


சுபத்ரா தேர்: தரவதவானா எனப்படும் இந்தத் தேரின் உயரம் 43 அடி. 12 மாதங்களைக் குறிக்கும். 12 சக்கரங்களைக் கொண்டது. ஜெயதுர்க்காவால் காக்கப்படும் இதற்குத் தேரோட்டியாக அர்ஜுனன் விளங்குகிறான். வடத்தின் பெயர் ஸ்வர்ணசூடா. சிவப்பு மற்றும் கறுப்புத் துணிகளால் ரதம் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.



இந்தியாவின் நான்கு புனித புண்ணிய தலங்களுள் பூரியும் ஒன்றாகும். மற்றவை துவாரகை, பத்ரிநாத் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை.நீண்ட வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரையில் பூரி நகரம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. ஜகந்நா தர் கோயில். இக்கோயில் கி.பி. 12 நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசர்களால் கட்டப்பட்டது. இராசேந்திரச் சோழனின் மகன் வயிற்றுப் பேரன்தான் சோடகங்கன் கோயில் சுற்றுச்சுவர் 200 மீட்டர் நீளமுடையது; உயரம்  65 மீட்டர், பூரி ஜகந்நாதரின் ரத உற்சவம் பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. இதுகுறித்து பாஹியன் என்ற சீனத்து அறிஞர் தமது குறிப்பில் எழுதியிருக்கிறார். ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இந்த உற்சவத்திற்கு ஆண்டுதோறும் மூன்று புதிய பெரிய தேர்களை உருவாக்குகிறார்கள். இரண்டு குறிப்பிட்ட காடுகளில் இருந்து மரங்கள் வெட்டிக்கொண்டு வரப்படுகின்றன. ஜகந்நாதருடைய தேரை தயாரிக்க 836 துண்டு மரங்கள் தயாரிக்கப் படுகின்றன.

நந்திகோஷா என்ற 45 அடி உயரத்தேரில் ஜகந்நாதர் பவனி வருகிறார். தர்பாதவனா என்ற 36 அடி உயரத் தேரில் சுபத்ரா பவனி வருகிறார். தேரில் தெய்வங்களின் உருவங்களும் மரத்தால் உருவாக் கப்பட்டுள்ளது. இவைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஜகந்நாதர் என்ற பெயருக்கு உலகை ஆளுபவர் என்று பொருள். உற்சவத்திற்கு முந்திய பவுர்ணமி தொடங்கி அமாவாசை வரை ஜகந்நாதர் பக்தர்களின் காட்சிக்கு அப்பாற்பட்டவராக இருப்பார். தாரை தப்பட்டைகள், துந்துபிகள், நகராக்கள் ஆகிய வாத்தியங்கள் முழங்க தேரில் அமரும் விக்ரஹங்கள் கோயிலின் முக்கிய வாசல் வழியாக வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூரி அரசர் தேரின் கீழ் தரையை துடைப்பத்தால் சத்தம் பண்ணிவிட்டு, பணிவோடு சுவாமியை அழைக்க ரதயாத்திரை தொடங்குகிறது. கோயிலின் தலைமை அர்ச்சகர் தேர்களில் அமர்ந்துள்ள இறை உருவங்களை புறப்படும்படி உரத்தக்குரல் கொண்டு கேட்டுக் கொள்ள பக்தர்களும் சேர்ந்து குரல் கொடுக்க மூன்று ரதங்களும் புறப்படுகின்றன.

பத்துலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கூடி தேர் வடத்தை பிடித்து இழுக்கிறார்கள் வழியில் பல சிறு கோயில்களைச் சேர்ந்த சிறு தேர்கள் வந்து வரிசையில் சேர்ந்து கொள்கின்றன. வண்ணத்திரைச் சீலைகளும், கொடியுமாகத் தேர்கள் அசைந்தாடி வருகின்றன. தெய்வங்கள் மூன்றும் தேர்களில் பவனி சென்று தங்கள் அத்தையைப் பார்த்துவிட்டு, அத்தை வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்து திரும்புவதாக ஐதீகம். சரியாக ஆறு நாட்களுக்குப் பின்னர், மூன்று ரதங்களும் கோயிலிற்கு திரும்பி வருகின்றன. உலகை ஆளுபவருக்கு எடுக்கப்படும் இந்த விழா, இந்தியவிலேயே மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகும்.


     தல வரலாறு:  

இந்திர தையுமா என்னும் அரசன் பூரியை ஆண்டு வந்தான். அவன் சிறந்த பக்தன். ஒருமுறை பெருமாள் அவன் கனவில் தோன்றி தனக்கு ஒரு கோயில் எழுப்புமாறு வேண்டினார். பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். இதையடுத்து இந்திர தையுமா கடல்பகுதியில் தனது காவலர்களை நிறுத்தி வைத்தான். கடலில் ஏதாவது பொருள் மிதந்து வந்தால் அதை எடுத்துவரும்படி கட்டளையிட்டான். காவலர்கள் கடற்கரையில் காத்து நின்றனர். நான்கைந்து நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதை காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே அபசகுணமாக இருந்ததால் அரசர் மிகவும் வருத்தமடைந்தார். அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். அவர் பெருமாளாக பெரு உருவம் எடுத்த மனிதனுக்கு பொறுமை வேண்டும். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளை அரசர் பிரதிஷ்டை செய்தார்.


இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. இக்கோயில் ஏறக்குறைய கி.பி. 1200 ல் அப்போதைய அரசர் அனந்தவர்மன் வாளியால் துவக்கப்பட்டு, 1135ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலை கட்ட கங்கையிலிருந்து கோதாவரி வரையுள்ள சாம்ராஜ்யத்தின் மக்களின் 12 வருட வரிப்பணம் செலவழித்தார் எனக்கூறப்படுகிறது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். துவாரகைபோல கடற்கரையில் அமைந்துள்ளது. கடல்நீர் ஆழமின்றி இருப்பதால், அதில் நீராடி இறைவனை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இத்தலம் பார்கவி, சர்வதீர்த்த மஹி என்னும் நதிகளால் சூழப்பட்டு, தட்சிணாவர்த்தி என்னும் வலம்புரிச்சங்கைப்போல் தோற்றம் தருகிறது. இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.


இவ்வாலயக் குளத்தில் மிகப்பெரிய ஆமைகள் உள்ளன. கோயில் கட்ட பணிபுரிந்த சிற்பிகளே இங்கே ஆமைகளாக வசித்து வருகின்றனராம். இங்கே பொதுவாக பூஜைகளைச் செய்பவர்கள் அந்தணர்கள் என்றாலும், தேர்த் திருவிழாவின் போது மூலவர்களைத் தேரில் அமர்த்துவது முதல் மீண்டும் நிலை வந்து சேர்ந்து கருவறையில் அமர்த்துவது வரையிலான எல்லா வேலைகளையும் சவரா என்னும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களே செய்கிறார்கள். இவர் கதை தைத்யர்கள் என்று அழைப்பார்கள். ஜெகந்நாதரின் உறவினர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றனர். இப்படிப் பல புதுமைகளுடன் விண்ணவரும் வந்து கண்டு களிக்கும் பூரி தேரோட்டம் சிறப்பு பெற்றது.


    சிறப்பம்சம்:   அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.