ஞாயிறு, 25 ஜூன், 2017

Puri jagannath Rath Yatra live telecast temple Car Festival பூரி ஜெகன்நாத் ஆலய தேர் திருவிழா



Puri Rath Yatra   temple Car Festival live telecast

பூரி ஜெகன்நாத் ஆலய தேர் திருவிழா
25-06-2017 
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   


0091-8939791843








அருள்மிகு ஜெகந்நாதர் (பூரி) திருக்கோயில்   மூலவர்:ஜெகந்நாதர் 



 பெயர்:- ஊர்:பூரி மாவட்டம்:பூரி 

மாநிலம்:ஒரிசா 

திருவிழா: இங்கு நடக்கும் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.    

தல சிறப்பு:   இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.        





முகவரி:   அருள்மிகு ஜெகந்நாதர் திருக்கோயில் பூரி - 752001, புவனேஸ்வர், ஒடிசா.   





பொது தகவல்: ஒரு அரண்மனை போன்ற தோற்றத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் சிம்ம வாயில், மேற்கில் வைராக்ய வாயில், வடக்கில் யானை வாயில், தெற்கில் குதிரை வாயில் என நான்கு வாயில்கள் உள்ளன.இவ்வாலயத்தில் சிவன், விநாயகர், ஆஞ்சனேயர், லட்சுமி நாராயணர், மகாலட்சுமி, புவனேஸ்வரி, சூரியன் போன்றோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஜகந்நாதர் ஆலயத்தை சுற்றி 30 கோயில்கள் உள்ளன. ஆஞ்சநேயர், விநாயகர், நவக்கிரங்கள், சூரியநாராயணார், லட்சுமிநாராயணர், கோபிநாதர், ராமச்சந்திரர், பாதாளேசுவரர், நீலமாதர் என்று பல பெயர்களில் சுவாமிக்கு ஆலயங்கள் உண்டு. மீராபாய், ஜயதேவர், சமர்த்த ராமதாஸ், துளசிதாசர், ஹரிதாஸ், ஆகிய பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இங்குள்ள கோபுரம் 713 அடி உயரம் கொண்டது. ஒரிசா மாநிலத்தின் மிகப்பெரிய கோபுரம் இதுதான். இது ராஜகோபுரம் இல்லை. மூலவரின் விமானம் ஆகும்.  

   பிரார்த்தனை 
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள ஜகநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.    

நேர்த்திக்கடன்:    இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன.    


தலபெருமை:

பூரி கடற்கரை கோயில் என்பதால் கடலில் நீராடிய பிறகே கோயிலுக்கு செல்லவேண்டும். கடற்கரையில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடலில் நீராடிவிட்டு முதலில் மார்க்கண்டேஸ்வரரை வணங்க வேண்டும். பின்பு இங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் ஆகியவற்றில் நீராடிய பிறகு ஜெகந்நாதரை தரிசிக்க செல்லலாம். இந்த கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோயிலுக்குள் செல்ல சிங்கவாயில், குதிரை வாயில், யானைவாயில், புலிக்கதவு ஆகிய நான்கு வாசல்கள் உள்ளன. இவற்றை சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாசலும் பிரமிடு போன்ற அமைப்பில் உள்ளது. கருவறையில் ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பலராமன் ஆறு அடி உயரமும், ஜெகந்நாதர் ஐந்தடி உயரமும், சுபத்ரா நான்கடி உயரமும் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் காட்சி தருவார்கள். இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன. காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடக்கும் நிவேதனம் மிக முக்கியமானது. பல பானைகளில் சாதம், குழம்பு, கூட்டு ஆகியவற்றை நிவேதனம் செய்து வெளியே வந்து கொண்டே இருக்கும். அந்த பானைகளை உடைத்து, அதிலுள்ள பிரசாதங்களை விற்பனை செய்துவிடுவார்கள். இந்த சாதத்தை காயவைத்து கடைத்தெருகளில் விற்பனை செய்வதும் வழக்கம். இதுவே இங்கு முக்கிய பிரசாதமாகும். இதை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.


இங்கே ஆண்டுதோறும் அக்ஷதா மாதத்தில் (ஆனி) வளர்பிறை இரண்டாம் நாளில் 21 நாட்கள் தேர்த் திருவிழா நடை பெறுகிறது.  இவ்விழாவில் பயன்படுத்தப்படும் தேர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளது போன்ற நிரந்தரமான தேர்கள் அல்ல. இவை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஒருமுறை வலம் வந்த தேரை மறு உலாவுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மூன்று பெரிய தேர்களை பூரி ஆலயத்தின் சிம்மத்துவார் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குண்டிச்சா தேவி ஆலயம் வரை இழுத்துச் செல்வார்கள். கிருஷ்ணர் இந்திரத்யும்னனிடம் தான் ஆண்டுக்கு ஒன்பது நாட்கள் தான் பிறந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும்; அதன் அடிப்படையிலேயே இந்த விழா நடப்பதாகவும் கூறுகின்றனர். கோகுலத்திலிருந்து கிருஷ்ணர் மதுரா நோக்கிச் செல்வதை இது குறிப்பிடுகிறது.


காலையில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்கள் சிங்க வாயிலின் வழியாக எடுத்துவரப்படுகின்றன. அதிக கனம் வாய்ந்த மர மூர்த்தங்கள் என்பதால் பலர் சேர்ந்து தூக்கி வருகின்றனர். சுமார் எட்டடி உயரம் கொண்ட ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோரின் மூர்த்தங்கள் அவரவர் தேர்களில் வைக்கப்படுகின்றன. கருப்பு நிறமும் பெரிய கண்களும் கொண்ட ஜெகந்நாதர் சாமவேதத்தைக் குறிக்கும் இறைவனாக விஷ்ணு சொரூபமாக விளங்குகிறார். வெண்ணிறமும் தாமரைக் கண்களுடனும் விளங்கும் பலராமர் ரிக் வேதத்தைக் குறிப்பவராக-சிவ சொரூபமாக விளங்குகிறார். மஞ்சள் நிறமும் தாமரைக் கண்களும் கொண்ட சுபத்ரா யஜுர் வேதத்தைக் குறிப்பவளாக சக்தியின் அம்சமாகத் திகழ்கிறாள். தேர்கள் புறப்படத் தயாரானவுடன், ராஜா கஜபதி என்னும் மன்னர் அங்கே வந்து, தங்கத்துடைப்பத்தால் அந்த எல்லையைத் தூய்மைப்படுத்துகிறார். அதன்பின்னர் சவரா வம்சத்தைச் சேர்ந்த தைத்யர்கள். காவலாக வர, ஆயிரக்கணக்கான பக்தர்களால் தேர்கள் இழுக்கப்படுகின்றன. ஊர்வலமாகச் செல்லும் இந்தத் தேர்களுடன் மற்றும் சில கோயில்களின் சிறிய தேர்களும் வந்து சேர்ந்துகொள்கின்றன. வேத மந்திரம் ஓத பக்திப் பாடல்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடைபெறுகிறது இவ்விழா.


ஒன்பது நாட்கள் அந்தக் கோயிலில் தங்கி இருக்கும் இந்த தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நாள், பகுதா யாத்ரா எனப்படும் திரும்பி வரும் பயணம் நடக்கிறது. நண்பகல் நேரத்தில் சிங்கத்வார் என்னும் இடத்தை அடையும் தேர்கள் அங்கேயே தங்குகின்றன. இறை வடிவங்களுக்கு ராஜ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஜெகந்நாதருக்கு தங்கக் கைகள் பொருத்தப்படுகின்றன. தங்கத்தாலான சங்கும் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார் இறைவன். கனாவேஷா எனப்படும் இது ஏகாதசி திருக்காட்சியாகும். மறுநாள் துவாதசியன்று மூவரையும் பூரி ஆலயத்துக்குள் கொண்டு சென்று, நான்கடி உயரமும் 13 அடி அகலமும் 16 அடி நீளமும் கொண்ட ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள். இவர்களை பக்தர்கள் வலம் வந்து வணங்கலாம். இத்துடன் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் புகழ் வாய்ந்த தேரோட்டம் நிறைவு பெறுகிறது. இவ்விழாவைக் காணும் பக்தர்கள் நூறாண்டுகள் இவ்வாலய இறைவனை வணங்கிய பயனைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆதிசங்கரர் இராமானுஜர், ஸ்ரீ மாத்வர் போன்றவர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள். பஜனை சம்பிரதாயத்தை, வட இந்தியாவில் பரப்பும் பூரிஜகந்நாதரின் கோயில் கடைசி காலத்தில், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஸ்ரீஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சிருங்கேரி மடம் இங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.


ஜெகந்நாதர் தேர்: நந்திகோஷ் அல்லது கருடத்வஜா என்று அழைக்கப்படும் ஜெகந்நாதரின் தேர் 45 அடி உயரம் கொண்டது. 16 கலைகளைக் குறிக்கும் வண்ணம் 16 சக்கரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேரோட்டி தாருகா எனப்படுகிறார். (மரவடிவம்). தேரை இழுக்க உதவும் வடத்திற்கு சங்கசூடா என்று பெயர். சிவப்பு மற்றும் நீல நிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.


பலராமர் தேர்: இது தலத்வஜ் எனப்படுகிறது. 44 அடி உயரம் கொண்டது. 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வண்ணம் 14 சக்கரங்களைக் கொண்டது. நான்கு குதிரைகளாக நான்கு வேதங்கள். வாசுதேவரால் காக்கப்படும் இந்தத் தேரின் சாரதியாக இருப்பவர் மாதவி. தேர் வடத்திற்கு வாசுகி என்று பெயர். சிவப்பு மற்றும் நீலநிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.


சுபத்ரா தேர்: தரவதவானா எனப்படும் இந்தத் தேரின் உயரம் 43 அடி. 12 மாதங்களைக் குறிக்கும். 12 சக்கரங்களைக் கொண்டது. ஜெயதுர்க்காவால் காக்கப்படும் இதற்குத் தேரோட்டியாக அர்ஜுனன் விளங்குகிறான். வடத்தின் பெயர் ஸ்வர்ணசூடா. சிவப்பு மற்றும் கறுப்புத் துணிகளால் ரதம் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.



இந்தியாவின் நான்கு புனித புண்ணிய தலங்களுள் பூரியும் ஒன்றாகும். மற்றவை துவாரகை, பத்ரிநாத் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை.நீண்ட வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரையில் பூரி நகரம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. ஜகந்நா தர் கோயில். இக்கோயில் கி.பி. 12 நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசர்களால் கட்டப்பட்டது. இராசேந்திரச் சோழனின் மகன் வயிற்றுப் பேரன்தான் சோடகங்கன் கோயில் சுற்றுச்சுவர் 200 மீட்டர் நீளமுடையது; உயரம்  65 மீட்டர், பூரி ஜகந்நாதரின் ரத உற்சவம் பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. இதுகுறித்து பாஹியன் என்ற சீனத்து அறிஞர் தமது குறிப்பில் எழுதியிருக்கிறார். ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இந்த உற்சவத்திற்கு ஆண்டுதோறும் மூன்று புதிய பெரிய தேர்களை உருவாக்குகிறார்கள். இரண்டு குறிப்பிட்ட காடுகளில் இருந்து மரங்கள் வெட்டிக்கொண்டு வரப்படுகின்றன. ஜகந்நாதருடைய தேரை தயாரிக்க 836 துண்டு மரங்கள் தயாரிக்கப் படுகின்றன.

நந்திகோஷா என்ற 45 அடி உயரத்தேரில் ஜகந்நாதர் பவனி வருகிறார். தர்பாதவனா என்ற 36 அடி உயரத் தேரில் சுபத்ரா பவனி வருகிறார். தேரில் தெய்வங்களின் உருவங்களும் மரத்தால் உருவாக் கப்பட்டுள்ளது. இவைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஜகந்நாதர் என்ற பெயருக்கு உலகை ஆளுபவர் என்று பொருள். உற்சவத்திற்கு முந்திய பவுர்ணமி தொடங்கி அமாவாசை வரை ஜகந்நாதர் பக்தர்களின் காட்சிக்கு அப்பாற்பட்டவராக இருப்பார். தாரை தப்பட்டைகள், துந்துபிகள், நகராக்கள் ஆகிய வாத்தியங்கள் முழங்க தேரில் அமரும் விக்ரஹங்கள் கோயிலின் முக்கிய வாசல் வழியாக வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூரி அரசர் தேரின் கீழ் தரையை துடைப்பத்தால் சத்தம் பண்ணிவிட்டு, பணிவோடு சுவாமியை அழைக்க ரதயாத்திரை தொடங்குகிறது. கோயிலின் தலைமை அர்ச்சகர் தேர்களில் அமர்ந்துள்ள இறை உருவங்களை புறப்படும்படி உரத்தக்குரல் கொண்டு கேட்டுக் கொள்ள பக்தர்களும் சேர்ந்து குரல் கொடுக்க மூன்று ரதங்களும் புறப்படுகின்றன.

பத்துலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கூடி தேர் வடத்தை பிடித்து இழுக்கிறார்கள் வழியில் பல சிறு கோயில்களைச் சேர்ந்த சிறு தேர்கள் வந்து வரிசையில் சேர்ந்து கொள்கின்றன. வண்ணத்திரைச் சீலைகளும், கொடியுமாகத் தேர்கள் அசைந்தாடி வருகின்றன. தெய்வங்கள் மூன்றும் தேர்களில் பவனி சென்று தங்கள் அத்தையைப் பார்த்துவிட்டு, அத்தை வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்து திரும்புவதாக ஐதீகம். சரியாக ஆறு நாட்களுக்குப் பின்னர், மூன்று ரதங்களும் கோயிலிற்கு திரும்பி வருகின்றன. உலகை ஆளுபவருக்கு எடுக்கப்படும் இந்த விழா, இந்தியவிலேயே மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகும்.


     தல வரலாறு:  

இந்திர தையுமா என்னும் அரசன் பூரியை ஆண்டு வந்தான். அவன் சிறந்த பக்தன். ஒருமுறை பெருமாள் அவன் கனவில் தோன்றி தனக்கு ஒரு கோயில் எழுப்புமாறு வேண்டினார். பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். இதையடுத்து இந்திர தையுமா கடல்பகுதியில் தனது காவலர்களை நிறுத்தி வைத்தான். கடலில் ஏதாவது பொருள் மிதந்து வந்தால் அதை எடுத்துவரும்படி கட்டளையிட்டான். காவலர்கள் கடற்கரையில் காத்து நின்றனர். நான்கைந்து நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதை காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே அபசகுணமாக இருந்ததால் அரசர் மிகவும் வருத்தமடைந்தார். அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். அவர் பெருமாளாக பெரு உருவம் எடுத்த மனிதனுக்கு பொறுமை வேண்டும். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளை அரசர் பிரதிஷ்டை செய்தார்.


இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. இக்கோயில் ஏறக்குறைய கி.பி. 1200 ல் அப்போதைய அரசர் அனந்தவர்மன் வாளியால் துவக்கப்பட்டு, 1135ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலை கட்ட கங்கையிலிருந்து கோதாவரி வரையுள்ள சாம்ராஜ்யத்தின் மக்களின் 12 வருட வரிப்பணம் செலவழித்தார் எனக்கூறப்படுகிறது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். துவாரகைபோல கடற்கரையில் அமைந்துள்ளது. கடல்நீர் ஆழமின்றி இருப்பதால், அதில் நீராடி இறைவனை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இத்தலம் பார்கவி, சர்வதீர்த்த மஹி என்னும் நதிகளால் சூழப்பட்டு, தட்சிணாவர்த்தி என்னும் வலம்புரிச்சங்கைப்போல் தோற்றம் தருகிறது. இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.


இவ்வாலயக் குளத்தில் மிகப்பெரிய ஆமைகள் உள்ளன. கோயில் கட்ட பணிபுரிந்த சிற்பிகளே இங்கே ஆமைகளாக வசித்து வருகின்றனராம். இங்கே பொதுவாக பூஜைகளைச் செய்பவர்கள் அந்தணர்கள் என்றாலும், தேர்த் திருவிழாவின் போது மூலவர்களைத் தேரில் அமர்த்துவது முதல் மீண்டும் நிலை வந்து சேர்ந்து கருவறையில் அமர்த்துவது வரையிலான எல்லா வேலைகளையும் சவரா என்னும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களே செய்கிறார்கள். இவர் கதை தைத்யர்கள் என்று அழைப்பார்கள். ஜெகந்நாதரின் உறவினர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றனர். இப்படிப் பல புதுமைகளுடன் விண்ணவரும் வந்து கண்டு களிக்கும் பூரி தேரோட்டம் சிறப்பு பெற்றது.


    சிறப்பம்சம்:   அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். 
     






திங்கள், 19 ஜூன், 2017

ஹரித்ரா தெப்பத் திருவிழா !இராஜகோபால சுவாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. ஆனி தெப்பத் திருவிழா அழைப்பிதழ் - 2017


ஆனி தெப்பத் திருவிழா அழைப்பிதழ் - 2017 








ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. ஆனி தெப்பத் திருவிழா அழைப்பிதழ் - 2017 அனைவரும் வருக.....!!!!!!!!!!!!!

நன்றி திரு விக்கி


ஹரித்ரா தெப்பத் திருவிழா!


மன்னார்குடி, ராஜகோபால சுவாமி கோயில் தீர்த்தக் குளமான ஹரித்ரா நதியில் ஆனி பவுர்ணமி அன்று தெப்பத் திருவிழா நடைபெறும். இக்குளத்தில் கோபாலகிருஷ்ணன், கோபியருடன் ஜலக்கிரீடை செய்ததாக ஐதீகம். கோபியர் நீராடிய போது அவர்கள் உடலில் பூசி இருந்த மஞ்சள் இக் குளத்தில் கலந்து, குளத்தின் நீரினை புனிதமடையச் செய்ததுடன், குளத்தின் நீர் மஞ்சள் நிறமாக மாறியதால், ஹரித்ரா நதி என்று பெயர் பெற்றது.






எல்லாக் காலங்களிலும் நீர் நிறைந்து காணப்படும் இக்குளம், காவேரியின் மகள் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது. இக்குளத்தில் 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் கலந்திருக்கிறது. இதில் ஆனி, பவுர்ணமியில் நீராடினால் புண்ணியம் கிட்டுவதுடன், நோய்களும் மாயமாகும். உடல் நலம் வளம் பெற்று சுக வாழ்வு கிட்டும் என ஞான நூல்கள் கூறுகின்றன


ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம் 0091-8939791843
.

Natarajar Temple, Chidambaram, Tamil Nadu ‌AANI THIRUMANJANA FESTIVAL SCHEDULE ‌This details given by G Sundara Deekshithar nandri 🕉

Natarajar Temple, Chidambaram, Tamil Nadu
‌AANI THIRUMANJANA FESTIVAL SCHEDULE
‌This details given by G Sundara Deekshithar nandri
🕉
21.06.2017 Wednesday DHWAJAAROHANAM 🕉

🕉22.06.2017 Thursday GOLDEN SOORYAPRABHA🕉

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   sri valli Astro center 0091-8939791843

🕉23.06.2017 Friday SILVER CHANDRAPARABHA🕉
🕉24.06.2017 Saturday SILVER BHOOTHA VAAHANAM 🕉
🕉25.06.2017 Sunday SILVER RISHABHAVAAHANAM (THERUVADAICHAAN)🕉
🕉26.06.2017 Monday SILVER GAJA VAAHANAM 🕉
🕉27.06.2017 Tuesday GOLDEN KAILAASA VAAHANAM🕉






🕉28.06.2017 Wednesday BHIKSHADANAR ON GOLDEN CAR 🕉

🕉29.06.2017 Thursday MAHAA RATHOTHSAVAM OF SRI NATARAJARAJAR🕉

🕉30.06.2017 Friday AANI THIRUMANJANA MAHAABHISHEKAM @3.00.a.m., AANI DHARSANAM @ 02.00 noon🕉

வியாழன், 15 ஜூன், 2017

ஆனி திருமஞ்சனம் சிறப்புகள் மற்றும் சிதம்பர ஆலய ஆனி திருமஞ்சனம் பற்றி தில்லை தீட்சிதர் திரு வெங்கடேஸ்சன் விளக்கம்

                                      ஆனிதிருமஞ்சனம்



திருமஞ்சனம் என்றால்,
மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி என்று ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பை பெறுகிறது. இப்படியான சிறப்புகளில், சந்தியா காலங்களாக விளங்கும் ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகதந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843
பொதுவாக சிவத்திருத்தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (லிங்கம்) தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறையே விசேசமாக அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி திருமஞ்சனமும் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இந்த 2 விசேச நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே, அதிகாலையில் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள், பெருமானுக்குப் பூஜைகள் செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே ஆனி திருமஞ்சனமாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆனி திருமஞ்சனத்தை ஆடலரசனான நடராஜ பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், எல்லாச் சிவ ஆலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதைக் கண்டத்தில் நிறுத்தியதால், நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. அத்துடன் வெம்மையுள்ள சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால், சிவபெருமான் பொன்னார் மேனியாய் காட்சி அளிக்கிறார். அபிசேக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் அதிகாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

பிற சிவ ஆலயங்களைக் காட்டிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்னும் விசேசமாகச் சிறப்பிக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி.

ஆனி மாதத்தில் சிதம்பரத்திலும், திருவாரூரிலும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. இந்த இரு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்கள் தரிசிப்பதாக ஐதீகம். சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் காட்டுவது போலவே, ஆடல் வல்லானின் திருநடனம் தலத்திற்குத் தலம் மாறுபடுகிறது.

 ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843




ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும், என்பது அருளாளர்களின் சொல் வாக்கு. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது. அதனால், அபிசேகத்திற்கு செல்லும்போது, நம்மாள் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு. ஆனித் திருமஞ்சன வைபவங்களில் சுமங்கலிகள் கலந்துகொள்ளும்போது, நீடுழி வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தை அவர்கள் பெறுகிறார்கள். அத்துடன் இளம் வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனி மாதம் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் அனுசரிக்கப்படுகிறது. இந்த உன்னத திருநாளில் முறைப்படி விரதம் இருந்து, மனமுருக வேண்டி.. ஆடலரசனின் அருளை நாமும் பெறுவோம்!
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

செவ்வாய், 13 ஜூன், 2017

சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு





 சங்கடஹர சதுர்த்தி விரதம்

*சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு 

*சங்கடஹர சதுர்த்தி:*

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். 
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம் 0091-8939791843
மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

*சதுர்த்தியின் சிறப்பு*

சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு  முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி பல ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.




    *கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்*
    *உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்*

ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவீர்கள். மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. 

விநாயகர் எளிமையானவர். ஆற்றங்கரைகளில் அரச மரத்தடியில் கூட எழுந்தருளி அருள் பாலிப்பவர். ஆனை முகனை நினைத்து மஞ்சளில் பிடித்து வைக்கலாம்! மண்ணிலே பிடித்து வைக்கலாம். எளிதாக கிடைக்கும் எருக்கம் பூ அருகம்புல் அவருக்கு பிடித்தமான பத்திரங்கள். இவரின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.

ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். 

விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.

*சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல்.*

சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.  இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.

பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும். விநாயகர் உலகை வலம் வந்தபோது, தனது அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவது’ என்று சபித்தார்.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று. சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி. நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார். விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக்கிரகம் செய்தார்.  புருகண்டி முனிவர்’ என்றழைக்கப்பட்ட அவருக்கு விநாயகரின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார். அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சிறந்தது. இதன் மூலம் சித்த சுத்தி ஏற்படுகிறது. ‘நான் பூஜை செய்கிறேன்‘ என்ற அகங்காரம் அகன்று, ‘அவனருளால் அவன் தாள் பணிகிறோம்‘ என்ற எண்ணம் தோன்றுகிறது.

நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர் தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக் கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.   சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும்.

சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.

*குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை*
*வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு*
*வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு*
*துள்ளி யோடும் தொடரும் வினைகளே*
*கருணை வள்ளல் கணபதியைத் தொழ*
*அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே*
*முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்*
*தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை*
*வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்*
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843
இன்று  சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

விநாயகரைத் தொழுது விக்கினங்கள் அகலப் பெறுவோமாக!