வெள்ளி, 28 ஜூலை, 2017

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொலைக்காட்சி tirumala tirupathi live darshan

திருமலை திருப்பதி svbc TTD tirumala tirupathi live darshan



ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்
whats app group 0091-8939791843
aanmeegathagavalgal@gmail.com




Namo narayana naya



கருட பஞ்சமி நாச்சியார் கோவில் கல் கருடன் தரிசனம்

கருட பஞ்சமி நாச்சியார் கோவில் கல் கருடன் தரிசனம்


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். 

நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர். 

ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. 


இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார். இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது.

அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.
















 நாச்சியார் கோவில்!







கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.
   திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
   கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.


   கருவறையில் பெருமாளோடு, பிரம்மா, ப்ரத்யும்னன்,பலராமன், அநிருத்தன்,புருஷோத்தமன் ஆகிய ஐவரும் உடன் அருள்பாலிக்கின்றனர்.   ஒரு சமயம்மேதாவி என்ற முனிவர்ஒருவர்திருமகள் தனக்கு மகளாகவும்,ஸ்ரீமன் நாராயணன் தனக்குமருமகனாகவும் அமைந்திட வேண்டும்என விரும்பி தவம் செய்தார்அவரதுவிருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டும்இவ்வுலகோருக்குநாரணின் பஞ்சவியூக திவ்யதரிசனத்தை காண்பித்திட வேண்டியும்,திருமகள் குழந்தை உருவெடுத்துஇத்தலத்தில் அவதரித்தார்அழகேயானஅந்த குழந்தையை முனிவர் எடுத்துவளர்க்கலானார்குழந்தையும் திருமணபருவம் எட்டியதுஅச் சமயம்நாராயணன்சங்கர்ஷணன்,பிரத்யும்னன்அநிருத்தன்சாம்பன்மற்றும் வாசுதேவன் என தனதுபஞ்சவீயூகத் தோற்றமான ஐந்துருகொண்டு திருமகளை தேடி இத் தலம்வந்தடைந்தார்.அப்போது கருடாழ்வார் லட்சுமி தேவி இங்கு வஞ்சுளவல்லியாக வளர்வதை அவர்களிடம் தெரிவித்தார்.முனிவரின் ஆசிரமத்தில் திருமகள்வளர்வதை அறிந்தார்தனதுஐந்துருவில் ஆசிரமம் சென்றார்.முனிவர் வந்தோர்க்கு அமுது படைத்தார்.வாசுதேவன் கை அலம்ப செல்கையில்,முனிவரின் மகளாய் வளரும்திருமகளின் கரம் பிடித்தார். 
திருமகள் அலறமுனிவர் அங்கு வர,திருமால் தனது ஐம்பொன் திருமேனிகாட்டினார்முனிவரிடம் " முனிவரே,உமது தவம் பலிக்கவே யாம் இந்தநாடகம் நடத்தினோம்". என்றார்தன்தவம் பலித்த மகிழ்ச்சியில் முனிவர்ஐயனிடம், " பெருமானேஎனக்கு நீர்தரிசனம் தந்தது போல் இத் தலத்தில்யாவரும் தரிசிக்கும் வண்ணம்என்றென்றும் அருள்புரிய வேண்டும்.எனது மகளாய் வளர்ந்தவஞ்சுளவல்லியின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படவேண்டும்இத் தலம்வந்து உம்மை சேவிப்பவர்அனைவருக்கும் முக்தி தர வேண்டும்".என வரங்கள் கேட்டார்பரந்தாமனும்அவ்வாறே ஆகட்டும் எனக் கூறிமுனிவருக்கு காட்சி தந்தகோலத்திலேயே இத் தல கருவறையில்அனைவருக்கும் காட்ச்யருள்கிறார்.இத்தலம் வந்து சேவிப்போருக்கு பெரும்பேறு அளிக்கிறார். பின்னர் பெருமாள் வஞ்சுளவல்லி திருமணம் நடந்தேறியது. பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும்  நாச்சியார் கோவிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை.

   இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும். இவ்வாறுஏன் நடைபெறுகின்றதுஒரு விளக்கம்பெருமாள் மேதாவி முனிவருக்குகொடுத்த வரம்தாயார் அன்னவாகனத்தில் எழுந்தருளுகின்றாள்அன்னமோ நளினமான பறவை,பெருமாளோ கருடனில்எழுந்தருளுகின்றார்கருடன் பலம்மிகுந்த அதே சமயம் வேகமாகசெல்லக்கூடிய பறவைஎனவே கருடன்அன்னத்தின் பின்னே செல்லவேண்டுமல்லாவாஎனவே கல்கருடனின் எடை கூடிக்கொண்டேசெல்கின்றதுஆகவே இப்போதும்தாயாருக்கு முதலிடம் .இந்த கருடனில் இன்னொரு சிறப்பு ஒன்பது நாகங்கள் ஆபரணங்களாக விளங்குவது ஆகும். எல்லாக் கருடனிலும் எட்டு நாகங்களே ஆபரணமாக இருக்கும். இங்கு ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.
 நாச்சியார் கோயில் "கருட சேவை"மிகப் பிரசித்தம்மிக விஷேசம்.ஆண்டாளின் தகப்பனாரனபெரியாழ்வார் இவரது சொரூபமே .இவருக்குரிய கஸ்தூரிகுங்குமப்பூ,புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழைஇலையில் கலந்து இவரதுதிருமேனியில் சாற்றினால்,சாற்றுவோர் அனைத்து வித இஷ்டசித்திகளையும் பெறுவர்இவருக்குபட்டு முதலிய வஸ்திரங்களை சார்த்தநினைத்தவை நடந்திடும்ஆடி மாதசுக்கில பஞ்சமி திதியில் இவரைவணங்க நன் மகப் பேறு கிடைக்கும்.மணமாகாததிருமணம் தடை பட்டுவரும் கன்னிப் பெண்களுக்குதிருமணம் கை கூடி வரும்இவரதுஜென்ம நட்சத்திரமான சுவாதிநட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பதுமிகச் சிறந்த பலனைத் தரும். 
இவரை நினைத்து வணங்கினால் விஷஜந்துக்களிடமிருந்துமுக்கியமாகபாம்புகளிடமிருந்து காத்தருள்வார்.வியாழக் கிழமைகள் மாலைவேளைகளும்சனிக் கிழமைகள் காலைவேளைகளும் இவரை தரிசனம் செய்யசிறந்த காலங்களாகும். 
   திருமங்கை ஆழ்வாருக்கு சுவாமியே சமாச்ரயணம் செய்து வைத்ததால் ஆழ்வாரால் ‘நம்பி’ என்று மங்களாசாசனம் செய்யப்பட்டவர் பெருமாள்.  இரு கரங்களுடம் எளிமையாக காட்சி தருகிறார். இது ஒரு மாடக் கோயில் ஆகும்.படிகள் ஏறிச்சென்று பெருமாளை சேவிக்கவேண்டும்.
சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களைக்கொண்டதுஇராஜகோபுரம் 5அடுக்குகளும், 76 அடி உயரமும்உடையதுகருவறைக்கு மேல் உள்ளவிமானமும் கோபுரம் போன்றேஅமைந்திருப்பது அரிதானது. (இதேபோன்ற அமைப்பு உள்ள மற்றொருகோவில்திருவல்லிக்கேணிபார்த்தசாரதிப் பெருமாள் கோவில்!).கண்ணன் காடு (கிருஷ்ணாரண்யம்)எனப்படும் ஐந்து தலங்களில் இதுவேஆரம்பத் தலம்மற்றவைதிருச்சேறை,திருக்கண்ணமங்கை,திருக்கண்ணபுரம் மற்றும்திருக்கண்ணங்குடி.
முக்தி அளிக்கும் 12 தலங்களில் ஒன்று.
கோச்செங்கண் என்ற சோழ மன்னன்சிறந்த சிவபக்தன்போரில் தோற்றபோது இங்கு நீராடி தெய்வ வாளினைப்பெற்று எதிரிகளை வென்றான்வைணவ பக்தன் ஆனான்இந்த ஆலயத்தை கட்டுவித்தான் என்ற வரலாறும் உண்டு.

வெள்ளி, 7 ஜூலை, 2017

மகான் ஶ்ரீ ராகவேந்திரர் ஜோதிடர்கள் இடம் தன் ஆயுள் பற்றி கேள்வி?


மகான் ஶ்ரீ ராகவேந்திரர் ஜோதிடர்கள் இடம் தன் ஆயுள் பற்றி கேள்வி?




ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.

""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.

""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.

""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!""மூன்றாமவர் சொன்னார்.

"எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்...
என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்...
பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""




""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார்.

ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.

புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்    0091-8939791843
நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது.

நவாப்பிடம் மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான்.

துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார்.

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அழகு எழில் கொஞ்சும் துங்கபத்திரை நதிக்கரையோரம் அமைந்திருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மடத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் நம் பிரார்த்தனை நிறைவேறுவதோடு மன அமைதியும் கிடைக்கும்.

கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை மாதம் 7ம்தேதி தொடக்கம். JYESTABHISHEKAM SRIRANGAM



 ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்   ஜூலை மாதம் 7ம்தேதி தொடக்கம்

JYESTABHISHEKAM SRIRANGAM


ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843


திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்டாபிஷேகம் (ஆனி திருமஞ்சனம்) மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேக விழா வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்கக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.




7 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சன குடம் எடுத்து வருதல், 9.15 மணிக்கு திருமஞ்சனம் பெரிய சன்னதி சேருதல், 9.45 மணிக்கு அங்கில் தொண்டைமான் மேடு சேருதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல் நடக்கிறது. மேலும் அன்று முழுவதும் பெருமாள் சன்னதியில் மூலவர் சேவை இல்லை. 8-ந்தேதி பெரிய பெருமாள் திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தளிகை எடுத்தல், பகல் 12 மணிக்கு தளிகை அமுது, 12.30 மணிக்கு செய்தல் நடக்கிறது.


ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843

மாலை 4.30 மணிக்கு மேல் பெருமாள் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 14-ந்தேதி ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. அதன்படி அன்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து தங்க குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு காவிரியில் இருந்து திருமஞ்சனம் குடம் எடுத்து வருதல், 9.30 மணிக்கு திருமஞ்சனம் தாயார் சன்னதி சேருதல், 10 மணிக்கு அங்கில்கள் தாயார் சன்னதி வசந்த மண்டபம் சேருதல், மாலை 4 மணிக்கு அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல், இரவு 8.30 மணிக்கு மங்களஹாரத்தி நடக்கிறது. அன்று தாயார் சன்னதியில் மூலவர் சேவை இல்லை.







15-ந்தேதி காலை 7 மணிக்கு தளிகை எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு தளிகை அமுது செய்தல், 1 மணிக்கு மங்களஹாரத்தி நடக்கிறது. அன்று மதியம் 3.30 மணி முதல் தாயார் மூலவர் சேவைக்கு அனுமதி உண்டு. 21-ந்தேதி சக்கரத்தாழ்வார் மற்றும் காட்டழகிய சிங்கர் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நடக்கிறது. மதியம் 3 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   0091-8939791843
மேலும் 7-ந்தேதி நடக்கும் ஜேஷ்டாபிஷேகத்தின் போது உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களை களைந்து திருமஞ்சனம் செய்து, பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மீண்டும் அங்கில்கள் சாற்றப்படும். அன்றைய தினம் மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்படும். 8-ந்தேதி திருப்பாவாடை நிகழ்ச்சியை முன்னிட்டு சந்தனு மண்டபத்தில் அதிக அளவு சாதம் தயாரித்து சன்னதி முன் நிரப்பப்பட்டு நம்பெருமாளுக்கு அமுது செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.