வெள்ளி, 18 ஜூலை, 2014

அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்

அனைத்து அம்மன்களின் காயத்திரி மந்திரங்கள்


காயத்திரி

(சகல காரியங்கள் வெற்றி அடைய)

ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்

துர்கை

(ராகுதோஷ நிவர்த்திக்காக)

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

அன்னபூரணி தேவி

(நித்தியான்ன பிராப்திக்காக)

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

சிவதூதி


ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா


ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்

அம்ருதேஸ்வரி தேவி

(ஆயுள் ஆரோக்கியம் பெற)

ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

வாக்பலா

(பேச்சுபிழை சரியாக)

ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

சர்வமங்கள
(நல் பயணத்திற்கு)

ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

கன்னிகா பரமேஸ்வரி


(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

காமேச்வரி

(மங்களம் உண்டாக)

ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

காமதேனு

(கேட்டது கிடைக்க)

ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்

காளிகா தேவி

(கேட்ட வரம் கிடைக்க)

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

வாராஹி

(நினைத்தது நிறைவேற)

ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

குலசுந்தரி

(சொத்து, கவுரவம் அடைய)

ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

சந்தோஷி மாதா

(திருமண தடை நீங்க)

ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

கவுமாரி தேவி

(சக்தி பெற)

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

கவுரிதேவி

(தியானம் சித்தி அடைய)

ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

கங்காதேவி

(ஞாபக சக்தி பெற)

ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்

சாமுண்டி


ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

சித்ரா

(கலைகளில் தேர்ச்சி பெற)

ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்

சின்னமஸ்தா
(எதிரிகளை வெல்ல)

ஓம் வைரேசான்யை ச வித்மஹே
சின்னமஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

சண்டீஸ்வரி

(நவகிரக தோஷங்கள் விலக)

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கௌரீஸித்தாய தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஜெயதுர்கா

(வெற்றி கிடைக்க)

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்

ஜானகிதேவி
(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)

ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் அயோநிஜாயை வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஜ்வாலாமாலினி

(பகைவரை வெல்ல)

1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

ஜேஷ்டலக்ஷ்மி

(மந்திர சக்தி பெற)

ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
நீலஜேஷ்டாயை தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

துவரிதா


ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

தாராதேவி


ஓம் தாராயை ச வித்மஹே
மனோக்ரஹாயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

திரிபுரசுந்தரி


ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்

ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்


மஹா திரிபுரசுந்தரி


ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்

தனலட்சுமி

(செல்வம் பெற)

ஓம் தம்தனதாயை வித்மஹே
ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்

பராசக்தி
(வாக்குவன்மை பெற)

ஓம் தசவனாய வித்மஹே
ஜ்வாமாலாயை ச தீமஹி
தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்


பிரணவதேவி


ஓம் ஓம்காராய வித்மஹே
பவதாராய தீமஹி
தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்

தரா


ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
சர்வ சித்தை ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

தூமாவதி


ஓம் தூமாவத்யை ச வித்மஹே
சம்ஹாரின்யை ச தீமஹி
தன்னோ தூம ப்ரசோதயாத்

நீலபதாகை
(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)

ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

நீளா


ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
ஸ்ரீ பூ சகை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீ(மகாலட்சுமி)


ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்


ஸ்ரீதேவி


ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்

தேவி பிராஹ்மணி


ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

சூலினிதேவி


(தீய சக்திகளிலிருந்து காக்க)

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்

சரஸ்வதி

(கல்வியும், விவேகமும் பெருக)

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்


லட்சுமி(சகல செல்வங்களையும் அடைய)


ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபந்தாய ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் பூ ஸக்யைச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் அமிர்தவாசினி வித்மஹே
பத்மலோசனீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

சப்தமாத்ருகா தேவி


ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்

பகமாளினி

(சுக பிரசவத்திற்காக)

ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்


பகளாதேவி


ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்

ஓம் குலகுமாரை வித்மஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்


பகளாமுகி


ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்

ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி தீமஹி
தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்

பாரதிதேவி

ஓம் நாகாராயை ச வித்மஹே
மஹா வித்யாயை தீமஹி
தன்னோ பாரதீ ப்ரசோதயாத்

புவனேஸ்வரி தேவி


ஓம் நாராயந்யை வித்மஹே
புவநேஸ்வர்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்


பூமா தேவி

(வீடு, நிலம் வாங்க)

ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தராஹ் ப்ரசோதயாத்

பைரவி தேவி


ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ பைரவீ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை வித்மஹே
பைரவைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்


மகாமாரி

(அம்மை வியாதி குணமடைய)

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்


மஹா வஜ்ரேஸ்வரி

(பிரச்சனைகளில் தீர்வு காண)

ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

மகாசக்தி

(மந்திர சக்தியில் வல்லமை பெற)

ஓம் தபோமயை வித்மஹே
காமத்ருஷ்ணை ச தீமஹி
தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்

மஹிஷாஸுரமர்தினி

(பகைவர்கள் சரணாகதி அடைய)

ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே
துர்காதேவ்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மகேஸ்வரி

(சர்ப தோஷம் நீங்க)

ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே
மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

மாதங்கி

(அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)

ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மாத்ரு (கா)

ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே
ஸப்தரூப ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மீனாக்ஷி

(சகல சவுபாக்கயங்களை பெற)

ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
சுந்தபப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்

முக்தீஸ்வரி

ஓம் த்ரிபுரதேவி வித்மஹே
முக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

யமுனா


ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே
தீர்தவாசினி தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

ராதா

(அனுகிரகஹம் பெற)

ஓம் விருஷபானுஜாயை வித்மஹே
கிருஷ்ணப்ரியாயை தீமஹி
தன்னோ ராதிகா ப்ரசோதயாத்

ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே
விஸ்வஜனன்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

வாணி

(கலைகளில் தேர்ச்சி பெற)

ஓம் நாதமயை ச வித்மஹே
வீணாதராயை தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

வாசவி

ஓம் வாசவ்யை ச வித்மஹே
குசுமபுத்ர்யை ச தீமஹி
தன்னோ கண்யகா ப்ரசோதயாத்

விஜயா
(வழக்குகளில் வெற்றி பெற)

ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

வைஷ்ணவி தேவி

(திருமண தடை நீங்க)

ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

ஓம் சக்ரதாரிணீ வித்மஹே
வைஷ்ணவீதேவீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

சியாமளா

(சகல சவுபாக்யங்களும் கிடைக்க)

ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே
க்லீம் காமேஸ்வரி தீமஹி
தன்னோ சியாமா ப்ரசோதயாத்

ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்

துர்கா தேவி


ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்


வனதுர்கா


ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
மகாசக்த்யை தீமஹி
தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்


ஆஸூரி துர்கா


ஓம் மகா காம்பீர்யை வித்மஹே
சத்ரு பக்ஷிண்யை தீமஹி
தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்

திருஷ்டி துர்கா


ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்

ஜாதவேதா துர்கா


ஓம் ஜாதவேதாயை வித்மஹே
வந்தி ரூபாயை தீமஹி
தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத்

வனதுர்கா


ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி
தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்

சந்தான துர்கா


ஓம் காத்யாயண்யை வித்மஹே
கர்பரக்ஷிண்யை தீமஹி
தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்

சபரி துர்கா


ஓம் காத்யாயண்யை வித்மஹே
கால ராத்ர்யை தீமஹி
தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்


சாந்தி துர்கா


ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஜயவரதாயை தீமஹி
தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத் 

ஆடி மாதத்தில் விசேஷம்

ஆடி மாதத்தில்   விசேஷம்

 


தெய்வ வழிபாடுகளுக்கு சிறப்பு பெற்றது ஆடி மாதம். நாகதேவி பூஜை என்று அழைக்கப்படும் சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் இந்த மாதம் முழுவதும் சிறப்பாக நடைபெறும். காலம் காலமாக இந்த வழிபாட்டு முறை  கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணு, ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்த நிலையில் நாகம் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவு உடையவை.

முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

நாக வழிபாடு அந்தந்த இடங்களில் அவரவர் வழிபாட்டு முறையில் நடக்கிறது. புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நைவேத்யம் செய்து 12 முறை வலம் வந்து வணங்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள் சொல்கின்றனர். பிரதோஷ நாட்களில் மவுன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும்.

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆதிசேஷனை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். உடல், மனம் நலம் பெறும். சகலவிதமான செல்வங்களையும் பெறலாம். நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம். வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் குறை இருக்காது. வீடுகளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.
-

ஆடி வெள்ளி அம்மன் விரதம்


ஆடி வெள்ளி அம்மன் விரதம்



ஆடி வெள்ளிக் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். 

இது கூடுதல் பலன்களை தரும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு உடன டியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம். இதை சுக்கிர வார விரதம் என்று அழைப் பார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந் தாலும், பாவக்கிரகம் பார்வையினால் சுக்கிரன் பலம் இழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிடைக்கும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும்.

சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று வெண் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோவிலில், ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைப்பது மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

அனறு பொங்கல் வைக்க உபயோகப்படுத்தப்படும் வரட்டியின் சாம்பல் விபூதிப் பிரசாதமாகத் தரப்படுகிறது. முப்பெரும் தேவிகளுக்கும் அடி வெள்ளி களில் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், நாலாவது வாரம் காய் அலங்காரமும் ஐந்தாவது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள்.

ஆடி கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பிரசாமாகத் தருவார்கள். இதனை பெண்கள் பெற்றால் மாங்கல்ய பலம் பெருகும். தருமபுரி ஆதினத்துக்கு உரிய தேவஸ் தானங்களில் ஆடி வெள்ளியன்று நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.

அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து விட்டு, 9 சிவாச்சாரியார்கள் 9 வகை மலர்களால் 9 சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சனை செய்வார்கள். இந்த அர்ச்சனைக்குத்தான் நவசக்தி அர்ச்சனை எனப்பெயர்.

மாரியம்மன் மருந்து மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்கு வார்கள். இதை எப்படி வைப்பது என தெரிந்து கொள் ளுங்கள். `ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' என்னும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்ப இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கஞ்சி வைக்கிறார்கள்.

இதை `ஆடிக்கஞ்சி' என்றும் மாரியம்மன் மருந்து என்றும் சொல்வார்கள். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உழிஞ்சை வேர், சீற்றாமுடடி, கட லாடி வேர் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும். பின்னர் இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. ஆடி மாதத்து குளிரிலும், காற்றிலும் வர வாய்ப்புள்ள நோய்களான இருமல், தொற்று நோய் வராது.

ஆடி முதல் வெள்ளி.

இன்று(18.07.2014) ஆடி முதல் வெள்ளி. 


ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது. ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம்.
மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர்.
 மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள்.
பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை,
 தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

ஔவை நோன்பு: ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும்.
 மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர்.
இதுவே ஒளவை நோன்பு. இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.

மகாலட்சுமி வழிபாடு: ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.

 ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சண்டி ஹோமம்: ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும்.

ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

வியாழன், 17 ஜூலை, 2014

ஆடிச் செவ்வாய்

 

ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன் சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டினுள் சஞ்சரிப்பதால் (ஒன்று சேருவதால்), சந்திரன் ஆழுமைப் பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலாம் அதிகரிக்கின்றது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார்.
தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி,தட்ஷிணாயனப் புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. அதாவது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி முடிய உத்திராணயன புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது.
தட்சிணாயன புண்ணிய காலம் என்பது தேவர்களின் இரவு நேரம் என்று இந்துமத புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் பகல் பொழுது குறைவாக இருக்கும். பலத்த காற்றும்,வெயில் குறைந்தும், மழைச்சாரலும் இருக்கும்.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது. சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் அம்பிகையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்றும் கூறுவர்.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசைகளில் பங்குபற்றி வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமணமப் பாக்கியமும், பிள்ளைப் பாக்கியமும் கிடைப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் அம்பிகையை மட்டுமல்ல முருகப் பெருமானையும் வேண்டி விரதம் கடைப்பிடிப்பது பலன் தரக்கூடியது.
விவாகமான பெண்கள் தம் கணவனின் (பிரச்சனை உள்ளவர்கள்) குறையாத அன்பைப் பெறவும், (என்றும் அர்த்தநாரீஸ்வரியாக இருக்கவும்), மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும் இவ் விரத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இவ் விரதத்தை இலங்கையில் உள்ளவர்கள் மற்றைய (வெள்ளிக்கழமை) விரதங்களைப் போன்று எண்ணெய் வைக்காது தோய்ந்து விரதம் பிடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால்; இந்தியாவில் ஆடிச் செவ்வாய் விரதத்தை புரட்டாத்திச் சனி விரதம்போல் என்ணெய் வைத்து, சந்தனம் பூசி தோய்ந்து விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாக உள்ளது.
"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. காரணம்;
செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை (கஷ்டத்தை) ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய், சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் எம்மைத் தீவிரமாக தாக்குகின்றன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். தீய கிரகங்களில் இருந்து வரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள் எண்ணை) சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு என யூகிக்க முடிகின்றது.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 17-07-2014

இன்று முதல் விண்ணுலகில் தட்சிணாயாண புண்ணிய காலம் (சூரியனின் தென்திசை பயண காலம்)ஆரம்பம்

ஞாயிறு, 22 ஜூன், 2014

சரஸ்வதியின் சிறப்பும் வழிபாடும்!

 

சரஸ்வதி  


சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர். அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப்புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன. தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப் பட்டுள்ளது. மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உ<யிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது <<உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த <கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.
சொல் கிழவியைத் தெரியுமா?
ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரின் பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழத்தி என்பதற்கு கிழவி என்றும், தலைவி என்றும் பொருளுண்டு. சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். இவளுக்கு வாக்தேவி என்றும் பெயருண்டு.
கல்விக்கோயில்: சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன், தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர், யாகத்தை அழித்ததுடன், யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார். மேலும், அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், நாவினாள் மூக்கரித்த நம்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும், நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் ஒருமுறையேனும் சீர்காழி சென்று, அங்கு அருள்புரியும் தோணியப்பரையும், அம்பாளையும், திருஞானசம்பந்தரையும் வணங்கி வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு, இத்தலத்தில் தான் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டினாள்.

ராகு-கேது தோஷங்கள் நீங்க, அனைத்து நலன்களும் பெருக பலன் தரும் ஸ்லோகம்


அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
நவகிரக ஸ்தோத்திரம்.


பொதுப்பொருள்:
பாதி (மனித) சரீரமுள்ளவரே, மகா பலசாலியானவரே, சந்திர-சூரியனையே மறைப்பவரே, ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே, ராகு பகவானே நமஸ்காரம். பலாச மலர் போன்றவரே, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலைவரானவரே, கோபம் மிக்க உருவம் கொண்டவரே, அநீதிக்கு அச்சமூட்டுபவரே, கேது பகவானே, நமஸ்காரம்.

புதன், 11 ஜூன், 2014

செந்தமிழ்நாட்டின் சொந்தக்கடவுள் முருகன்.


செந்தமிழ்நாட்டின் சொந்தக்கடவுள் முருகன். மலையும், மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி நிலப்பகுதியின் தலைவன் முருகனே. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று குவலயத்தோர் வழிபட்ட வரலாறு சங்க இலக்கியங்கள் பல இடங்களில் சொல்கின்றன. முருகவேளுக்கு உரிய மந்திரமாக சடாச்சரம் (ஆறெழுத்து) விளங்குகிறது. அது சரவணபவ என்னும் உயரிய மந்திரமே. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், செவ்வாய், சஷ்டி, மற்றும் கிருத்திகை விரதங்கள் முக்கியமானவை. உலகெங்கும் குமாரக்கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளும் மிக சிறப்பானவை. முருகனின் சிறப்பான செயல்களை விளக்கும் வண்ணம் அமைந்தவை அறுபடை வீடுகள். 

1. தந்தைக்கு மந்திரம் சொன்ன சுவாமிமலை
2.பழம் வேண்டி ஆண்டியாய் நின்ற பழனி மலை
3. சூரபத்மனை போரிட்டு வென்ற திருச்செந்தூர்
4.சினம் தணிந்து தேவயாணியை திருமணம் புரிந்த திருப்பரங்குன்றம்
5.குறமகள் வள்ளியை திருமணம் புரிந்த திருத்தணிகை
6.இருதேவியரோடு அருளாட்சி புரிந்து வரும் பழமுதிர்சோலை என்பவை அறுபடை வீடுகளாம்.

சிவனாருக்கும், அன்னை உமைக்கும் இடையே சிறுகுழந்தையாய் குமரக்கடவுள் வீற்று இருக்கும் சோமாஸ்கந்த வழிபாடு, மற்றும் விழா புறப்பாடு தமிழகத்தில் மிகப்பழமையானதும், சிறப்பானதுமாகும்.

உற்சவர் மயில் மீது வள்ளி,தேவசேனா தேவியரோடு வரும் அழகு காட்சியாகும்.

பாரத தேசம் மட்டுமின்றி, இலங்கையின் கதிர்காமம், நல்லூர்,மாவிட்டபுரம்,பகுதிகளிலும், மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் முருக வழிபாடு வெகு சிறப்பானது.

தமிழர் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் முருகனுக்கு கோயில் உண்டென்று சொல்லலாம்.