வெள்ளி, 21 ஏப்ரல், 2017

 சித்திரை திருவோணம் நடராஜர் அபிஷேகம் திருவண்ணாமலை ஆலயத்தில் இருந்து சிறப்பு அபிஷேக காட்சி.

 சித்திரை திருவோணம் நடராஜர் அபிஷேகம் திருவண்ணாமலை ஆலயத்தில் இருந்து சிறப்பு அபிஷேக காட்சி.

1 நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி

2 நடராஜர் அபிஷேகம் சித்திரை திருவோணம்

3 நடராஜர் அபிஷேகம் ஆனி உத்திரம்

4 நடராஜர் அபிஷேகம் ஆவணி சதுர்த்தசி

5 நடராஜர் அபிஷேகம் புரட்டாசி சதுர்த்தசி

6 நடராஜர் அபிஷேகம் மார்கழி திருவாதிரை




பஞ்ச சபைகள்:

ரத்தின சபை – திருவாலங்காடு
கனகசபை – சிதம்பரம்
ரஜிதசபை – (வெள்ளி சபை) – மதுரை
தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்

ஆனந்த தாண்டவம் – சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் – திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் – மதுரை
ஊர்த்துவ தாண்டவம் – அவிநாசி
பிரம்ம தாண்டவம் – திருமுருகன்பூண்டி

காட்டிடை ஆடும் கடவுள்

திருவாலங்காடு – ஆலங்காடு
திருவெண்பாக்கம் – இலந்தைக்காடு
திருவெவ்வூர் – ஈக்காடு
திருப்பாரூர் – மூங்கிற்காடு
திருவிற்கோலம் – தர்ப்பைக்காடு

ஆனந்தத் தாண்டவம்

படைத்தல் – காளிகாதாண்டவம் – திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல் – கவுரிதாண்டவம் – திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல் – சங்கார தாண்டவம் – நள்ளிரவில்.
மறைத்தல் – திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல் – ஊர்த்துவ தாண்டவம் – திருவாலங்காடு, ரத்தினசபை.
ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

நடராஜர் அபிஷேகங்கள்

தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. இரவுக்கு ஆவணி, அர்த்தயாமத்துக்குப் புரட்டாசி, ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் படும்.
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

#தில்லையில்_ஐந்து சபைகள்
1. சித்சபை – சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.
2. கனகசபை – சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.
3. தேவசபை – பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
4. நிருத்த சபை – தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.
5. ராஜசபை – ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.

#நவதாண்டவம்

இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்

திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.

தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம்.

மடவார் விளாகம் நடராஜர்

ஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.
மேலைச் சிதம்பரம்

பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும்.

மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும். ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும்.
உதயத்திற்கு முன்பே ….

தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்

வியாழன், 20 ஏப்ரல், 2017

தேவ குரு பகவானை (கிரகம்) jupiter தரிசிக்க வேண்டுமா?

குரு பகவானை (கிரகம்) jupiter தரிசிக்க வேண்டுமா?
அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் இரவு மணி 08.00 To 10.00 க்குள் கிழக்கு முகமாக நின்று மேல் நோக்கி பார்த்தால் (Jupiter) குரு பகவானை பிரகாசமாக நட்சத்திர வடிவத்தில் தரிசிக்கலாம்.






குரு காயத்ரீ மந்திரம் சொல்லி தரிசித்தல் உத்தமம்.
குரு காயத்ரி மந்திரம்
வருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||
நன்றி.திரு.முரளி

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

இன்று 16-04-2017 வராக ஜெயந்தி கல்லிடைக்குறிச்சி திருக்கரந்தை ஆதிவராகர்

கல்லிடைக்குறிச்சி திருக்கரந்தை ஆதிவராகர்

     







சாப விமோசனத்திற்காக பூமிக்கு வந்த குபேரன், ஈசனை பல தலங்களில் தரிசித்து வந்த 







வேளையில், ஆதிவராகரை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து பேறு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

மூலவர் ஆதிவராகராகவும் உற்சவர் லட்சுமிபதி எனும் திருப்பெயருடனும் தாயார் பூமாதேவியுடன் திருவருள் புரியும் திருத்தலம் இது.

குபேரன் வராகமூர்த்தியை பிரதிஷ்டை செய்தபோது யாக பாத்திரங்கள் கல்லாய் மாறின. அதனால் இவ்வூர் சிலாசாலிபுரம் என்றானது. அதனால் ரிஷிகள் இங்கு தவம் செய்ய ருசி (ஆசை) கொண்டதால் ‘குருசி’ எனப்பட்டது. சிலாசாலிகுரிசி - கற்கள் குவிந்த, யாக ருசி மிகுந்த ஊர் எனும் பொருள்படும்படி. இதுவே ‘கல்லிடைக்குறிச்சி’யாயிற்று.

தல தீர்த்தமாக தாமிரபரணி ஆறு விளங்கும் இத்தலத்தில் வைகானஸ ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. 

திருக்கரந்தை, கல்யாணபுரி என புராணங்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது.

குபேரன் பிரதிஷ்டை செய்த மூர்த்தி காலப்போக்கில் பூமியில் புதையுண்டது. ஒரு பக்தரின் கனவில் பெருமாள் தோன்றி தான் இருக்கும் இடத்தை அறிவித்து ஆலயம் எழுப்ப ஆணையிட அதன்படி இத்தலம் எழுப்பப்பட்டது. 

கருவறையில் பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் இடது மடியில் பூமா தேவியை தாங்கிய நிலையில் பெருமாள் தரிசனமளிக்கிறார்.

எப்போதும் தாயாருடன் சேர்ந்தே இருப்பதால் இவரை நித்ய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கின்றனர்.




திருமண வரம் வேண்டுவோர்க்கு தட்டாமல் அவ்வரத்தை அருள்வதால் இத்தலம் கல்யாணபுரி என்று அழைக்கப்படுகிறது. 

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் இத்தல வராகர் பாடப்பெற்றிருக்கிறார்.

ஆலய பிராகாரத்தில் ஒரு புறம் ஸ்ரீதேவி சந்நதி கொண்டிருக்கிறாள்; மறுபுறம், வழக்கமாக ஆண்டாள் இருக்க வேண்டிய சந்நதியில் பூதேவி வீற்றிருப்பது இத்தல சிறப்பு. 

தாயார் சந்நதியருகே அற்புதமான தசாவதார சிலைகளைக் கண்டு மகிழலாம்.

வெளிப் பிராகாரத்தின் தென்புறத்தில் சாஸ்தா மண்டபமும் வடகிழக்குப் பகுதியில் தர்மசாஸ்தா சந்நதியும் உள்ளது வைணவ தலத்தில் அபூர்வமாகக் காணக் கிடைக்கக்கூடியது.

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு கருடசேவை உற்சவம் நிகழ்த்தி தம் நன்றிக் கடனை செலுத்துகின்றனர். அதனால் இத்தலத்தில் அடிக்கடி கருட சேவையில் பெருமாளை தரிசிக்கலாம்.

கருவறை விமானத்தில் சயனப்பெருமாளை தரிசிக்கலாம். பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளுடன் காட்சியளிக்கும் இவருக்கு வராகமூர்த்திக்கு பூஜை செய்த பின் காலையில் பூஜை செய்யப்படுகிறது. அப்போது மட்டுமே இவரை தரிசனம் செய்யலாம்.

ஆலய மேற்புற சுவரில் வீற்றுள்ள மூலை கருடாழ்வாருக்கு ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று கருடபகவானை புஷ்பாங்கியில் தரிசிக்கலாம்.

இத்தல பெருமாளுக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தினமும் ஆலய பட்டாச்சார்யார் மேளதாளங்கள் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று திருமஞ்சனத்திற்கான தீர்த்தத்தை எடுத்து வருவார்.

நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீரவும் கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் ஆதிவராகர் அருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். 

பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதும் விசேஷ திருமஞ்சனம் செய்வதும் ஆலயத்தின் சிறப்பு மிக்க வேறு இரு வகை பிரார்த்தனைகள்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. 

திங்கள், 10 ஏப்ரல், 2017

கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக Singaperumalkoil Narasimar thirukoil



Patalathri Narasimhar- Singaperumal Koil பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்)




Singaperumalkoil Narasimar thirukoil sharasakalabisekam
 நன்றி பிரகாஷ்ஐயா













Patalathri Narasimhar Temple : Patalathri Narasimhar Patalathri Narasimhar Temple Details | Patalathri Narasimhar- Singaperumal Koil | Tamilnadu Temple | பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்)



அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) திருக்கோயில்

மூலவர்:பாடலாத்ரி நரசிம்மர்
உற்சவர்:பிரகலாதவரதர்
அம்மன்/தாயார்:அஹோபிலவல்லி
தல விருட்சம்:பாரிஜாதம்
தீர்த்தம்:சுத்த புஷ்கரிணி
ஆகமம்/பூஜை:வைகானஸம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:சிங்கப்பெருமாள் கோயில்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:
-

 திருவிழா:
சித்திரை வருடப்பிறப்பு, சித்ராபவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி 10 நாள் பிரமோற்ஸவம், ஆடிப்பூரம், ஆவணியில் பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, தை சங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மாசியில் 5 நாள் தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம்.

 தல சிறப்பு:
பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சம். மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. நரசிம்மர் கோயில்களில், நரசிம்மர் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் தரிசனம் தருவார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் உள்ள நரசிம்மர் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் இத்தகைய கோலத்தை காண்பது அரிது.

திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-603 202, காஞ்சிபுரம் மாவட்டம்.






 பொது தகவல்:
இங்கு மூலவர் சன்னதியின்கீழ் உள்ள விமானம் பிரணவ கோடி விமானம் எனப்படும்.


பிரார்த்தனை
கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக இங்கு சிறப்புபூஜை செய்யப்படுகிறது. திருவாதிரை, சுவாதி, , நட்சத்திரத்தினரும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வழிபாடு செய்தால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. கோயிலின் பின்புறமுள்ள அழிஞ்சல் மரம் மிகவும் சக்தி வாய்ந்தது. திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இம்மரத்தில் சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 தலபெருமை:
"பாடலம்' என்றால் "சிவப்பு' "அத்ரி' என்றால் "மலை'. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன் இம்மலையில் தரிசனம் தந்தால் "பாடலாத்ரி' என இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது. இது பல்லவர் கால குடைவரைக் கோயிலாகும்.தாயார், ஆண்டாள் சன்னதிகள் கிழக்கு நோக்கியும், விஷ்வக்ஸேனர், லட்சுமி நரசிம்மர் சன்னதிகள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. கருடன், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னதிகளும் உள்ளன கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதாரக்காட்சிகள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.


12 ஆழ்வார்களும் இத்தலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளனர்.


தோசை பிரசாதம்:
 திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீரங்கம் என்றால் புளியோதரை, இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மர் என்றால் சுவையான மிளகு தோசை தான் நினைவுக்கு வரும். சென்னை - திருச்சி சாலையில் செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ள இந்த ஊர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் வழங்கப்படுகிறது. எஸ்.பி.கோவில்' என்று சுருக்கமாக சொல்கிறார்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த குடைவரைக் கோவிலான இங்கு பாடலாத்ரி நரசிம்மர் மூலவராக வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் திருமணத்தடை, கடன் பிரச்னை, எதிரி தொல்லை நீங்கும். இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். இந்த தோசைகள் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும். அதில் எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கின்றனர். இதை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப் பெருமாள் கோவில்' என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர். ஒரு தோசை விலை ரூ.25.

  தல வரலாறு:
ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது. மூலவர் பாடலாத்ரி நரசிம்மர் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கையை அபயகரமாகவும் , இடது கை தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. மூன்று கண்களுடன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில், பிரணவகோடி விமானத்தின் கீழ் அருள்கின்றனர்.மூலவர் குகைக்கோயிலில் அருள்பாலிப்பதால் அவரை வலம் வர வேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்து வலம் வர வேண்டும்.


சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. 

ஆன்மீகதகவல்கள் 0091-8939791843

ஶ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசாயி கோதை நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாணம்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசாயி கோதை நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாணம்


 srivadapatharasai andal temple srivilliputhur
Thiru kalyanam .
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843









ஶ்ரீ ஆண்டாள் இரங்கமன்னார்

ஶ்ரீ ஆண்டாள் இரங்கமன்னார்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

ஶ்ரீ வில்லி்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் நான்காம் நாள்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசாயி கோதை நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் நான்காம் நாள்
பங்குனி மாதம் 22ஆம் தேதி (04-04-2017)
ஶ்ரீஇரங்கமன்னார் கோவர்த்தன பர்வத  வாகனத்தில் ஶ்ரீ ஆண்டாள்சேஷ வாகனம் அரிய படத்தொகுப்பு




 ஶ்ரீ ஆண்டாள்சேஷ வாகனம் அரிய படத்தொகுப்பு












 srivadapatharasai andal temple srivilliputhur
Thiru kalyanam .
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

ஞானம் தரும் அதிகார நந்தி திருக்காட்சி மயிலை பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம் நாள் இன்று காலை 04-04-2017

ஞானம் தரும் அதிகார நந்தி திருக்காட்சி
மயிலை பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம் நாள் காலை நடைபெறும்  இந்த அதிகாரநந்திக் காட்சி  வரலாற்று சிறப்பு வாய்ந்தது.   அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். அதிகார நந்தியின் சேவை' சரியாக காலை 6 மணிக்கு நடைபெற்றது












புள்ளினங்கள் பாடும் பூபாள வேளையில், வங்கக் கடற்கரையின் மென்காற்று வீச அதிகாரநந்தியின் மீதமர்ந்து அகிலத்தை ஆள வரும் சிவபெருமானின் திரு உலா காட்சியைக் 'காண கண்கோடி வேண்டு'மென அப்போதே  பாடி விட்டார் அமரர் பாபநாசம் சிவன்.
அதிகாரநந்தி ஆலயத்துக்கு வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன.04-04-2017
நன்றி இராதை நாரயணன்
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

இராம நவமி 05-04-2017 இராம நாமத்தின் சிறப்பு

இராம நவமி 05-04-2017

இராம நாமத்தின் சிறப்பு

1.   நமக்கு நன்மை வரவேண்டுமானால்   'ராம  நாமத்தை இடைவிடாமல்   கூறவேண்டும். நமது  ஒவ்வொரு மூச்சும்    'ராம் 'ராம்'   என்றே உட்சென்றும் ,  வெளியேறுதலும்  வேண்டும்.  

2. நாம்  அறியாமல்   செய்த தவறுக்கு  ராம நாமமே மிகச்சிறந்த  பிராயசித்தம்.  அறிந்தே  செய்த              தவறானால்   அதற்கு வருந்துவதும் ,   தண்டனையை ஏற்பதுவும்,   பிராயசித்தமும்   ராம  நாமமே. காலால்  நடக்கும்  ஒவ்வொரு  அடியும்  'ராம் '  என்றே  நடக்கவேண்டும் .



                                          திருவல்லிக்கேணி இராம உற்சவம்
       



                                              திருமலை திருப்பதி இராம உற்சவம்




3.  எல்லா விதமான  கஷ்டங்களுக்கும்  நிவாரணம்  'ராம  நாம  ஜெபமே.' கிழக்கு  நோக்கி  செல்ல  செல்ல  மேற்கிலிருந்து  விலகிடுவோம். அதுபோல  ராம  நாமாவில்  கரைய  கரைய  தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

 4. ' ராம  நாம'  ஜெபத்திற்கு  குரு கிடைக்கவேண்டும்  என்று  கால  தாமதம்  செய்தல்  கூடாது. ஏனெனில் 'ராம  நாமமே '  தன்னுள்  குருவையும்   கொண்டுள்ளது . நாமமே  பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில்  விழிப்பு  வந்தவுடனே  சொல்லவேண்டியது   'ராம நாமம்.'  எழுந்து  கடமைகளை  செய்யும்போதும்  சொல்லவேண்டியதும்  'ராம நாமம்.' அந்த  நாள்  நமக்கு  'ராம  நாம'  நாளாக  இருக்கவேண்டும்.

6. ' ராம நாம '  ஜெபத்தில்  நாம்  இருந்தால் , நமது  கர்ம வினையின்படி  ஏதேனும்  துக்கமோ , அவமானமோ  நிகழவேண்டியதாயின்  அவைகள்  தடுக்கப்படும் அல்லது  நமக்கு  அது பாதிப்பு  இன்றி   மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை  தாங்கும்  வலிமையையும், அதுவும்  பிரசாதமாக  ஏற்கும்  பக்குவமும்  வரும்,

7. எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும்  'ராம  நாமா'    சொல்லலாம்.  எங்கும்  உணவு  உண்ணுமுன்  'ராம  நாமா'  சொல்லிசாப்பிடலாம். இறைவனும்  அவனது   நாமாவும்  ஒன்றே!


8.  'ராம  நாமா'  எழுத  மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்  'ராம  நாமா'  சொல்ல   மனம்  மட்டும்  போதும்.

இதைதான்  "நா  உண்டு,  நாமா  உண்டு"   என்றனர்  பெரியோர்கள் .

9. ஒரு  வீட்டில் உள்ள பெண்  'ராம  நாமா'    சொன்னால்  அந்த  பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள்  அனைவரும்  பிறப்பு, இறப்பு  சக்கரத்திலிருந்து  விடுபடுவார்கள். அந்த  வீட்டினில்  தெய்வீகம்  நிறைந்துவிடும். அதுவே  கோவிலாகும் .

10. எல்லாவித  சாஸ்திர  அறிவும்  'ராம  நாமாவில்  அடங்கும்.  எல்லாவித  நோய்களுக்கும்  'ராம  நாமா' சிறந்த  மருந்து, துன்பங்களுக்கும்  அதுவே  முடிவு .

11. நமது  இலட்சியம்  அழியா  ஆனந்தமே. அது  'ராம  நாம ஜெபத்தால்  பெற  முடியும். 'ராம  நாமாவினால்   வினைகள்  எரிந்து,  எரிந்து  நோய்கள்  குறையும். சஞ்சிதம்,  ஆகாமியம்  கருகி  ப்ராரப்தம்  சுகமாக  அனுபவித்து  ஜீரணிக்கபடும்.

12. நமது  பயணத்தில்  பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ  செல்லும்போதும்  'ராம  நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள்  தவிர்க்கப்படும்.

காசி  விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது ) ஒவ்வொரு  நாளும், வில்வ  தளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பிக்கிறார்கள்.

 13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும்  'ராம  நாமா' சொல்லுவதன்  மூலம்   அந்த  பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம  நாமா'  சொல்ல  எந்த  ஒரு  விதியும்  இல்லை.  மனமிருந்தால்  மார்க்கமுண்டு.

பெண்கள்  சமைக்கும்பொழுது  ராம நாமம்   சொல்லி சமைத்தால்,   அந்த  உணவே  ராம  பிரசாதமாகி ......அதை   உண்பவருக்கு  தூய  குணங்களையும் ,  நோயற்ற   தன்மையையும்  அவர்களது  உடல்  ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள்  இருப்பின்  குணமாகும்.

14. வேதங்களின்  படி  ஒருவன்  புண்ணிய நதிகளில்  நீராடி  பின்பு  வேதம்  கற்று,  பூஜைகளை  நியதிப்படி  செய்தவனாய்,  யோகியாய்  முந்தய  ஜன்மங்களில்  வாழ்ந்தவனாக  இருந்தால், சுமார்  40,00,000 பிறவிகளை  கடந்தவனாக  இருந்தால்  மட்டுமே  அவனால்   'ராம  நாமா' வை    ஒரு முறை  சொல்லமுடியும்.

15. 'ராம  நாமாவை  உரக்க சொல்லுங்கள்.   காற்றில்
  ராம  நாம  அதிர்வு    பரவி,   உங்களை  சுற்றிலும்   காற்றில்  ஒரு தூய்மையை   ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும்   அந்த   தூய அதிர்வு  ஊடுருவி   தூய்மை  மற்றும்  அமைதியை  கேட்பவருக்கும்    தரும்.

சுற்றியுள்ள  மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள்   எல்லாம்   'ராம நாமா'  கேட்டு  கேட்டு ..... அவைகளும்  மிக  உயர்ந்த  பிறவிகளை  பெறலாம்.  இதுவும்  சேவையே!  ..... யார்  அறிவர்?  நமது  முந்தய  பிறவிகளில்  நாமும்  'ராம  நாமா'  கேட்டு  கேட்டு  இப்போதைய  பிறவியினை  பெற  ஏதேனும்  ஒரு பக்தரின்  வீட்டருகில்  மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய்  இருந்தோமோ ! என்னவோ ........  அப்புண்ணிய  பலனை ..... ராமனே  அறிவான்.  *ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843



                                            திருவல்லிக்கேணி இராம உற்சவம்
 
மயிலை மாதவ பெருமாள் ராமர்

 'ராம  நாமா'  சொல்லும்பொழுது  ஏற்படும்  தூய  அதிர்வானது  காற்றில்  பதிந்துள்ள  மனிதர்களின்   தீய   எண்ணங்களால்  ஏற்பட்ட   தீய  அதிர்வுகளை ,தீயசக்திகளை....... .....நோய்க்கிருமிகளை  அழித்துவிடும்.

 'ராம  நாமா  அதிர்வு  நமது   ரத்தத்தில்  உள்ள  DNA  மற்றும்  gene coding...இல்  உள்ள   குணங்களுக்கு  காரணமான ........கோபம் , வெறுப்பு,  பொய்,  பொறாமை , சூது,  போன்ற   தீய  குணங்களின்  தன்மைகளுக்கு  காரணமான....gene coding யை  அழித்து .........ராம  நாம  அதிர்வு  ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு  காரணமான   ராமரின்  குணங்களை  ஏற்படுத்தும்.('யத்  பாவோ  தத்  பவதி'--எதை  நினைக்கிறாயோ  அதுவே  ஆகிறாய்!)

 'ராம  நாமா'  சொல்ல  சொல்ல  .........பரப்ரம்மமே  ஆகிவிடுகிறோம் .

அகில  உலகையும்  வியாபித்து   காக்கும்  விந்தை  மிக்கதோர்   நுண்ணிய   சக்தியே  " ராம் ".

அதுவே   உருவம்   கொண்டபோது ,  தசரத ராமனாக , சீதாராமானாக,  ரகுராமனாக ,  கோதண்ட ராமனாக  பெயருடன்  ( நாம ரூபமாக )  வந்தது.

உண்மையில்  சத்தியமாம்   ஒரே  உண்மை  ராம்  ஒருவனே. ராம்  அனைத்திலும்  உள்ளான்,  அனைத்தும்   ராமில்  உள்ளன.  ராம்  ஒருவனே  உண்மையான ,  பேரன்பே  வடிவான  உணர்வுமய  வஸ்து .........பிரம்மம்  என்பதும்   அவனே !

எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர்   அனைத்தும்  ராமில்  ஒடுங்கவேண்டும்.

இடைவிடாது  ராம  நாமத்தை  ஜெபித்து  வந்தால்  அழியா  இன்பத்தை  ராம்  அருள்வான்  என ஸ்வாமி  பப்பா  ராமதாஸ்    தமது  தந்தையிடம்  உபதேசமும்  பெற்று  ராம  நாமத்தில்  கரைந்து  ராம  ரசமாய்,  அதன்  மயமாய்    தானே   ஆனார்.

16. நமது  ஒரே  அடைக்கலம் 'ராம  நாமா'.  அதுவே  நம்மை  சம்சார  சாகரத்தில்  இருந்து
 கரையேற்றும். பிறவித்தளையை  அறுக்கும் .

17. மற்ற  எல்லா  தர்மங்களும்  ஒன்று  பாவத்தை  நீக்கும் .  மற்ற  ஒன்று  புண்ணியத்தை  தரும். ஆனால்  'ராம  நாமா'  ஒன்றே  பாவத்தை  அறுத்து, புண்ணியமும்  அர்ப்பணமாகி  பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி )    முக்தி  தரும்.

18. 'ராம  நாமா'  மட்டுமே  நன்மையே  கொண்டு வந்து  தரும் .  மருந்தின்  தன்மை  தெரியாமல்  சாப்பிட்டாலும்  அது  நோயினை  குணப்படுத்திவிடும்.  அது போல  'ராம  நாமா' வும்  சொல்ல சொல்ல  பிறவி  நோயை, துக்க  நோயை ,
ஆசை  என்ற   சம்சார  நோயை  அழித்துவிடும்.

19. நமது  கைகளால்  எது  கொடுத்தாலும்,  அது  நமது  தலைவனாகிய  ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில்  உள்ள  மனித வடிவில்  உள்ள எஜமான்  ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம்.  எது ,  எதனை  எவரிடம்  இருந்து  பெற்றாலும்  நமது  அன்னையாகிய  ஸ்ரீ ராமனே ( எதிரில்  உள்ள  மனித  வடிவில் )    கருணையுடனும், அன்புடனும் நமது    நன்மைக்காக    தருகிறான்.  இந்த  உணர்வு  பெருக, பெருக   ஸ்ரீ ராமனே   தந்து , வாங்குகிறான். ( எதிரில்  உள்ள  மனிதரை  கவனிக்காமல்   அவரின் ....அந்தராத்மவுடனே   பேசுகிறோம்.......ராம்!  அன்னையே   இந்த  உடலுள்   இருந்து  நீயே  பேசி, இயங்கி,  செயல்படுகிறாய் ......என  வணங்க,  நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன்  ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன்  ஸ்ரீ ராமன்.


20. 'ராம  நாமா' சொல்ல ,  சொல்ல  நிகழும்  எல்லா  செயல்களும் ,  நிகழ்ச்சிகளுக்கும்    ' அந்த  ஒன்றே !'  காரணமாகிறது என்பதும் ...... எல்லாம்  அந்த  பிரம்மத்தின்  விளையாட்டே !.......என்பதும்  உள்ளங்கை  நெல்லிக்கனியாய்  உணரப்படும் .

21.'ராம  நாமா'   சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன்  மூலம்  .....  பார்ப்பது  ராம்  ,  பார்வை  ராம்,  பார்க்கப்படுவது  ராம்,  கேட்பது  ராம், கேள்வி  ராம்,  கேட்கபடுவது  ராம்,  புலன்கள்  ராம்,   உணர்வது  ராம்,  உணரபடுவது  ராம், உணர்வு ராம், இந்த   பிரபஞ்சம்  ராம்,  இந்த  மனம்  ராம் , புத்தி  ராம்,  உடலும்  ராம்,  ஆன்மா  ராம்,  24   தத்துவங்கள்  ராம் ,  ..... .........நன்மை,   தீமை , இன்பம்  துன்பம் ,  எல்லாம்  ராம் ,   எல்லாம்   ராம் , எல்லாம்  ராம்.

இத்தகைய   .'ராம  நாமா' வில்  பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக   சித்தமாக ) அனைத்தும்  ஒன்றாக   அறிவதே  உண்மையான  அறிவு.   அனைத்தும்  ஒன்றாக ......ராமனாக   ( ஆத்மா  ராமனாக )  பார்ப்பதுவே  ......... எல்லா  எண்ணங்கள் ....... எல்லா  செயல்கள் ........எல்லா  உணர்ச்சிகளிலும் ...........இறை  உணர்வை  உணர்வதுவே ............இந்த  பிறவியின்  பயனாகும்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஶ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் மூன்றாம் நாள் பங்குனி மாதம் 20ஆம் தேதி (02-04-2017) ஶ்ரீஇரங்கமன்னார் சிம்ம வாகனத்தில் ஶ்ரீ ஆண்டாள் சந்திர பிரபை வாகனம் அரிய படத்தொகுப்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசாயி கோதை நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் மூன்றாம் நாள்
பங்குனி மாதம் 20ஆம் தேதி (02-04-2017)
ஶ்ரீஇரங்கமன்னார் சிம்ம வாகனத்தில்
ஶ்ரீ ஆண்டாள் சந்திர பிரபை வாகனம் அரிய படத்தொகுப்பு




ஶ்ரீஇரங்கமன்னார் சிம்ம வாகனத்தில் 


ஶ்ரீஇரங்கமன்னார் சிம்ம வாகனத்தில் 


ஶ்ரீ ஆண்டாள் சந்திர பிரபை வாகனம்




                              ஶ்ரீஇரங்கமன்னார் சிம்ம வாகனத்தில் 

                                     ஶ்ரீ ஆண்டாள் சந்திர பிரபை வாகனம்





 srivadapatharasai andal temple srivilliputhur
Thiru kalyanam .
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

சனி, 1 ஏப்ரல், 2017

திருக்கல்யாண உற்சவம் இரண்டாம் நாள் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் இரட்டை தோளுக்கினியானில் புறப்பாடு

ஶ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசாயி கோதை நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் இரண்டாம் நாள்
பங்குனி மாதம் 19ஆம் தேதி (01-04-2017)
இரட்டை தோளுக்கினியானில் புறப்பாடு அரிய படத்தொகுப்பு










 srivadapatharasai andal temple srivilliputhur
Thiru kalyanam .
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திருக்கல்யாணம் துவஜாரோஹணம் எனும் கொடியோற்றம் நடைப்பெற்ற அரிய படத்தொகுப்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசாயி கோதை நாச்சியார் ஆண்டாள் திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம் இரண்டாம் நாள்
பங்குனி மாதம் 19ஆம் தேதி (01-04-2017)
துவஜாரோஹணம்
எனும் கொடியோற்றம் நடைப்பெற்ற அரிய படத்தொகுப்பு
நன்றி திருநிறைசெல்வி.சண்முகப்பிரியா

 
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில்  திருக்கல்யாணம்
துவஜாரோஹணம் எனும் கொடியோற்றம் நடைப்பெற்ற அரிய படத்தொகுப்பு



Srivilliputhur andal 8939791843



ஶ்ரீஆண்டாள் இரங்கமன்னர்










 srivadapatharasai andal temple srivilliputhur
Thiru kalyanam .
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843