புதன், 24 மே, 2017

நவ கிரகங்களின் தனி உருவ படம் வீட்டில் வைத்து வணங்கலாமா?.

நவ கிரகங்களின் தனி உருவ படம் வீட்டில் வைத்து வணங்கலாமா?.

நவ கிரகங்களின் தனி உருவ படம் வீட்டில் வைத்து வணங்க கூடாது நவகிரகங்களின் மனைவியுடன் உள்ள படங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்





நவ கிரகங்களை வணங்கும் போது நவகிரகங்களின் மனைவியையும் சேர்த்து வணங்க நவகிரகங்கள் மகிழ்ந்து நமக்கு நல்ல பலன்களை வழங்கும்.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

நவ கிரகங்களின் மனைவியின் பெயர்கள்

#சூரியனின் மனைவி உஷா பிரித்து

#சந்திரனின் மனைவி ரோகிணி தேவி

#செவ்வாயின் மனைவி சக்தி தேவி

#புதனின் மனைவி ஞான சக்தி தேவி

#குருவின் மனைவி தாராதேவி

#சுக்கிரணின் மனைவி சுகிர்த்தி

#சனியின் மனைவி நீலா தேவி

#ராகுவின் மனைவி சிம்ஹி

#கேதுவின் மனைவி சித்திரலேகா

ஓம் நமசிவாய

செவ்வாய், 23 மே, 2017

வைகாசி மாத கிருத்திகை திருமண தடைகள் நீக்கும் புகழிமலை வேலவன்

வைகாசி மாத கிருத்திகை திருமண தடைகள் நீக்கும்  புகழிமலை வேலவன்


ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843


கரூர் மாவட்டத்தின் ஒரு ஓரத்தில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்குப் புகழிமலை சொந்தமானது. அதனால் இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.










புகழி மலை


வேலாயுத வழிபாடு

ஆரம்ப காலத்தில் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் குறைகள் நீங்கி நிறைவுபெற மக்கள் இந்த மலையில் வேல் மட்டும் ஊன்றி அதனை வழிபட்டுள்ளனர். வேலை வழிபடுதல் தொன்மையான மரபு. இந்த வேல் வழிபாட்டை அருணகிரிநாதர் பதிவுசெய்துள்ளார். “பொருத வரு சூரன் கிரியுருவ வளிபுனல் சுவர வேலை எறிவோனே” என திருப்புகழில் பாடுகிறார்.

வேலாயுத வழிபாடே வேலன் வழிபாடாகி பின்னர் உருவுடைய முருகனை நிறுவி வழிபடும் வழக்கமாக மறியுள்ளது. வேல் ஊன்றிய இம்மலை மற்றும் அமைந்துள்ள ஊர் வேலாயுத(ன்)ம்பாளையம் எனப்படுகிறது.

கரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் 315 படிகளைக் கொண்ட ஒரு சிறிய குன்றின்மேல் (புகழி மலை) பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் மயில் வாகனம் பொதுவாக மற்ற கோயில்களில் அமைந்திருப்பதைப் போல் இல்லாமல், முருகனுக்கு வலப்புறம் தோகையும் இடப்புறம் தலையும் கொண்டிருப்பதாக அமைந்துள்ளது

மலை மேல் அமர்ந்த வேலவன்

கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், 315 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. கோயிலின் விமான அமைப்பு, மைசூரு பகுதிகளில் இருக்கும் விமானங்கள் போல அமைந்திருக்கிறது.

சுமார் 400 அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் முருகனுடைய மயில்வாகன சன்னிதி அமைந்துள்ளது. மலைக் காவல் அய்யனாருக்கு எனத் தனிச் சன்னிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன் – பார்வதி, ஒளவையார் சுதைகள் அமர்ந்த நிலையில் உள்ளன.

இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமார்கள் சன்னதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பார்த்த இடும்பன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்துக்குள் நுழையலாம்.

வேலேந்திய பாலன்

மூலஸ்தானம் முன்பு முன் மகாமண்டபம் உள்ளது. அங்கே பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக கருவறைக் கடவுள் காட்சி நல்குகிறார்.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

முருகனைத் தரிசத்துப் பின் சன்னிதியை விட்டு வெளியே வந்தவுடன், வலப்புறம் சிவலிங்கம், மீனாட்சி அம்மன் கொடிமரம் மற்றும் நவகிரகங்களைத் தரிசிக்கலாம்.

கோயிலின் பின்புறம் நட்ட வேல் ஒன்றும் கிணறு ஒன்றும் உள்ளன. இத்திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்துக்கு சிவன் சன்னிதி கொடிமரம், சுப்ரமணியர் கோயில் கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றி 13 நாட்கள் உற்சவம் நடைபெறும். தைப்பூசத் தேர் சிறப்பாக நடைபெறும். ஐப்பசி கந்தசஷ்டி உற்சவம் சூரசம்காரத்துடன் ஏழு நாட்கள் நடைபெறும். அதில் 50 ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்வார்கள். கார்த்திகை தீபம், ஆடிக் கிருத்திகை, மாதக் கிருத்திகை, சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.




இந்தத் தலத்தில் உள்ள விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்து மலையில் உள்ள கார்த்திகேயனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்ற உறுதி இப்பகுதி மக்களின் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ளது.

காலை 9 மணி முதல் 12 மணிவரை, மாலை 5 மணி முதல் இரவு 7மணிவரை கோயில் திறந்திருக்கும். இரண்டு காலம், உச்சி காலம் மற்றும் சாயரக்ஷை என இரு கால பூஜை நடைபெறும் திருக்கோயில் இது.

திங்கள், 22 மே, 2017

செவ்வாய் தோஷம் பிரச்சனை காரணமாக திருமண தடை நடக்கிறதா அதற்கு எளிய வழிபாடு

செவ்வாய் தோஷம் பிரச்சனை காரணமாக திருமண தடை நடக்கிறதா அதற்கு எளிய வழிபாடு.











நாளை வைகாசி மாத செவ்வாய் கிழமை தேய்பிறை  பிரதோஷம் செவ்வாய் தோஷம் ஐதாகத்தில் உள்ள அடியார்கள் நாளை காலை விரதம் இருந்து மாலை சிவ ஆலய வழிபாடு செய்ய வேண்டும்.      









               ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843  

   மாலை ஆபிஷேகத்திற்கு பால்,இளநீர்,தயிர் போன்ற ஆபிஷேக பொருள்கள் கொடுத்து வில்வ இலை ☘ இதே போன்று 27  இலைகள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் வில்வ இலை கிடைகாத இடங்களில் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத் துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து எடுத்துச் சென்ற காட்சி

சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத் துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து எடுத்துச் சென்ற காட்சி

சன்னிதானத்தில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த கொடிமரத்தின் கீ்ழ்பகுதியில் சேதம் அடைந் துள்ளது.








எனவே, அதற்குப் பதிலாக ரூ.3.50 கோடியில் புதிதாக தேக்கு மரத்தில் கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதற்காக கோந்தி வயக்கரை வனப்பகுதியில் இருந்து 45 அடி நீளம், 135 செ.மீ. சுற்றளவு கொண்ட 64 வயதுடைய தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மரம் பம்பைக்கு கடந்த ஆண்டு செப் டம்பரில் கொண்டுவரப்பட்டது.


ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843


ஜூன் 25-ல் புதிய கொடிமரம்

இதனிடையே, புதிய கொடி மரத்தை நிறுவுவதற்காக பழைய கொடிமரம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பீடம் அமைக்கப்பட் டுள்ளது. ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படு கிறது. இந்நிலையில், பம்பையில் எண்ணெய்க் காப்பில் உள்ள கொடிமரத்தை சந்நிதானம் வரை தோளில் சுமந்து வரும் பொறுப்பு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதில், ஐயப்ப சேவா சங்கத் தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சேர்ந்து மே 22-ம் தேதி புதிய கொடிமரத்தை பம்பையில் இருந்து சந்நிதானம் வரை தோளில் சுமந்து செல்வது என முடிவு செய்யப்பட் டுள்ளது.

20 நாட்கள் விரதம்

 மே 22-ம் தேதி புதிய கொடிமரம் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம் வழியாக சந்நிதானத்துக்குக் கொண்டுசெல் லப்படும்.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843.

22-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் சந்நிதானத்துக்கு கொடிமரத்தைக் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளோம். கொடிமரம் முழுவதும் தங்கத் தகடு வேயப்பட்டு பீடத்தில் நிறுத்தப்படும்
ஓம் சுவாமியே சரணம்
நன்றி பூலோக சொர்க்கம்

ஞாயிறு, 21 மே, 2017

27 நட்சத்திர கோயில்கள் 1,அசுவினி நட்சத்திர அடியார்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஆலயம்

27 நட்சத்திர கோயில்கள்  
1,அசுவினி  நட்சத்திர அடியார்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஆலயம்
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் 

 மூலவர்:பிறவி மருந்தீஸ்வரர் 
அம்மன்:பிரகன்நாயகி (பெரியநாயகி) 
 முன் புராண பெயர்:- ஊர்:திருத்துறைப்பூண்டி 
மாவட்டம்:திருவாரூர் 
மாநிலம்:தமிழ்நாடு

 திருவிழா:   சித்திரை திருவிழா இங்கு விசேஷம். நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன.   







 தல சிறப்பு:
        இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.    

முகவரி:  அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி-614 713, திருவாரூர் மாவட்டம்.    

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

     பிரார்த்தனை

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


    நேர்த்திக்கடன்:    சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.    

தலபெருமை: அஸ்வினி நட்சத்திரத்தலம்:அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவச்சக்திகள் அதிகம் உண்டு. அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யுக்கூடிய தலமே பிறவி மருந்தீஸ்வரர் கோயிலாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறவியிலேயே நோய் நிவாரணத்தன்மை இருக்கும். இருந்தாலும் இவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, தாங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, இத்தலம் சென்று தன்வந்திரி ஹோமம், சனீஸ்வர ஹோமம், செவ்வாய் பகவான் வழிபாடு செய்தால் நோயில்லாத வாழ்வு அமையும்.

கஜசம்ஹார மூர்த்தி:தாருகாவனத்தில் தங்கியிருந்த முனிவர்கள், தாங்கள் செய்யும் யாகங்களின் பலனை ஏற்பதால் தான், சிவனுக்கே சக்தி ஏற்பட்டு உலகை காப்பதாக ஆணவம் கொண்டனர். அவர்களுக்கு புத்தி கற்பிக்க இறைவன், பிட்சாடனராக, உலகமே வியக்கும் பேரழகுடன் அங்கு வந்தார். அவர்கள் பிட்சாடனராக மாறுவேடத்தில் வந்த அந்த சுந்தரனைப் பார்த்தனர். தன்னிலை மறந்து, ஆடைகள் அவிழ அவர் பின்னால் சென்றனர். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்தார்.

தங்கள் மனைவியரை விட அழகில் சிறந்த அப்பெண்ணின் பின் னால் முனிவர்கள் சென்றனர். சற்று நேரத்தில் தங்கள் நிலை உணர்ந்து, தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய அவர்களை அழிக்க, மந்திர சக்தியால் உருவான யானை ஒன்றை ஏவினர். சிவன் அந்த யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தார். இதனால் அவர் கஜசம்ஹார மூர்த்தி என பெயர் பெற்றார்.  முனிவர்கள் தங்கள் ஆணவம் நீங்கப் பெற்றனர்.    
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843
  தல வரலாறு:   ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப்பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல,

இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான். அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.    


சிறப்பம்சம்:  அதிசயத்தின் அடிப்படையில்:இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர். 
     

சனி, 20 மே, 2017

துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றி

துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றி


துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அனுமனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது அனுமனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843


1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி





9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி





ஶ்ரீராம பாதம் சரணம்

வியாழன், 18 மே, 2017

உங்களின் மன கவலைகள் தீர பிரதோஷ நாளில்வில்வாஷ்டகம் சொல்லுங்கள்! BILVASTAGAM

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும்  கவலைகள் தீர்க்க பிரதோஷ நாளில். வில்வாஷ்டகம் சொல்லுங்கள்!
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்
BILVASTAGAM / வில்வாஷ்டகம்

பிரதோஷம்,சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, சிவபெருமானை வழிபட்டால், சகல யோகங்களும் பெறலாம். ஞானம் பெற்று பூரண வாழ்வை அடையலாம்.

🕉த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்

🕉த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:

🕉தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:

🕉காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்

🕉ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்





🕉இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா

🕉நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா

🕉தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்

🕉க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச

🕉பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

🕉யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ

🕉கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்

🕉அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே

🕉அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா

🕉அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

🕉பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ

🕉சிவலோகமவாப்னோதி சிவேன சஹ மொததே

🕉வேதம் நான்கிலும் மெய் பொருளாவது.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

நாதன் நாமம் நமசிவாயவே என்று சிவ வழிபாடு செய்வோம். சிக்கலான வாழ்க்கையை சீர்படுத்தி அருளுவான் ஈசன்!
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும்  கவலைகள் தீர்க்க

திங்கள், 8 மே, 2017

வாராரு அழகர் வாராரு அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் புறப்படுகிறார் KALLALAGAR

வாராரு அழகர் வாராரு அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் புறப்படுகிறார்








 இன்று 08-05-2017
கள்ளழகர் புறப்படுகிறார் பக்தர்களை நேரில் சந்தித்து ஆசி வழங்க இன்று மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் மே 10ம் தேதி மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவில் சித்திரை திருவிழா மே 6ம் தேதி துவங்கியது.
முதல் 2 நாட்களும் தோளுக்கினியான் அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சித்திரை திருவிழாவின் முக்கியமான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10 ல் நடக்கிறது. இதற்காக இன்று மாலை 5:20 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843

கோயில் முன் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழியானவுடன் கொம்பு சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் ராஜ கோபுரத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் 18ம் படி
கருப்பண்ண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7:00 மணிக்கு மேள, தாளம் முழங்க புறப்படுகிறார்.

                                                   18ம் படி கருப்பண்ண சுவாமி



அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டகபடிகளில் எழுந்தருளி, நாளை காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து
புதூரிலும், மாலையில் அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843
நள்ளிரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடையும் கள்ளழகருக்கு திருமஞ்சணம் நடக்கிறது






.அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் காலை 6:15 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் ஆற்றில் இறங்குகிறார்.

சனி, 6 மே, 2017

சப்தஸ்தானம் கோவில்கள் என்றால் என்ன ? அதன் சிறப்புகள்

சப்தஸ்தானம் கோவில்கள்  என்றால் என்ன ?  அதன் சிறப்புகள்


சப்தஸ்தானம் என்பது ஏழு இடங்கள் என்று பொருள்படும். ஏழு ஊர்களைக் குறிக்கவும் அச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானம் எனப்படும் ஏழு இடங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.






பெயர் விளக்கம்

சப்த + ஸ்தானம் என்றால் ஏழு புனித இடங்கள் என்றும் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் கோயில்களுடன் தொடர்புடைய சொல்லாக இச்சொல் பயன்படுத்தப்படுவதால் புனிதத் தலங்கள் என்றும் சப்தஸ்தானத் தலங்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நந்திதேவர் விழா

சப்தஸ்தான விழாவிற்கு முன்னதாக நடைபெறும் நந்திதேவர் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் அதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது.

 அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளுவதும் திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவிற்கு திருமழபாடியிலிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்லுவதும் மரபாக இருந்து வருகின்றது. 

இந்த திருமண வைபவத்தை நேரில் காணும் கல்யாணமாகாத வரன்களுக்கு உடனடியாக திருமண பிராப்தி வாய்க்கும் என்பதும் அக்காரணத்தில்தான் இப்பகுதியில் "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்" என்ற சொல் வழக்கும் நிலவி வருகிறது.

சப்தஸ்தான விழா

சப்தஸ்தான விழா அல்லது ஏழூர்த் திருவிழா என்பதானது ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா ஆகும். இவ் விழா தஞ்சாவூர்மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவாகும். 
இத்திருவிழா பெரும்பாலும் சைவக் கோயில்களோடு தொடர்புடையதாக உள்ளது. இவ்விழாவின் போது ஒரு கோயில் முதன்மைக் கோயிலாக அமைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அமைவது தொடர்புடைய கோயில்களுக்கு அந்தந்த பல்லக்குகள் சென்றுவரும் நிகழ்வாகும். 

ஒவ்வொர் ஆண்டும் குறிப்பிட்ட நாளில் முதன்மைக் கோயிலிலிருந்து பல்லக்கு கிளம்பி பிற ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, நிறைவாக கிளம்பிய தலமான முதன்மைக் கோயிலுக்கு வந்து சேருவது மரபாக உள்ளது. முதன்மைக் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அக்கோயிலைச் சார்ந்த இறைவனும், இறைவியும் உலா வருகின்றனர்
.          

                       ........                                                        திருப்பழனம்



அங்கிருந்து பிற தலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த கோயிலிலுள்ள பிற இறைவனும், இறைவியும் உள்ள பல்லக்குகள் சேர்ந்துகொள்கின்றன.

பலதரப்பட்ட மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினைக் காண அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் வருவதால் ஒரு சமூகப் பண்பாட்டுப் பிணைப்பு ஏற்படுகிறது. 

வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுக்கின்றனர். அந்தந்த ஊர்களில் தம் வீட்டு விழாவினைப் போல ஈடுபாட்டோடு மக்கள் கொண்டாடுகின்றனர்.

திருவையாறு

தமிழகத்தில் நடைபெறும் சப்தஸ்தானத் திருவிழாக்களில் முக்கியமானது திருவையாறுசப்தஸ்தானம் ஆகும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்துஅலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் இறைவனும், இறைவியும் உலாக் கிளம்பி, தொடர்புடைய கீழ்க்கண்ட ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக திருவையாற்றுக்குத் திரும்புவர்.

திருவையாறு ஐயாறப்பர் கோயில்
திருப்பழனம்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
திருக்கண்டியூர்
திருப்பூந்துருத்தி
திருநெய்த்தானம்

                             .                                     ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர் - அன்னபூரணி திருச்சோற்றுத்துறை

கடைசித்தலமான திருநெய்த்தானம் எனப்படும் தில்லைஸ்தானத்தில் இரவு வாண வேடிக்கையுடன் விழா சிறப்புற நடைபெறும். திருவையாற்றில் இறைவனுக்குப் பூப்போடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறும். திருமுறைகள் ஓதிக்கொண்டு பல்லக்குடன் பக்தர்கள் செல்வர். செல்லும் இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்க்கவும், தொடர்ந்து நடக்கும் அவர்களுக்கு சோர்வு தெரியாமல் இருக்கவும் பானகம் போன்ற பானங்களை ஆங்காங்கே வழங்கப்படுகிறது. பல இடங்களில் அன்னதானமும் நடைபெறும். காலையில் கிளம்ப ஆரம்பித்தால் மறுநாள் காலை வரை இந்த இறைவனோடு உடனாட உலா நடைபெறும். செல்லும் இடங்களில் பல்லக்கில் உள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்புப் பூஜைகள், கற்பூர ஆராதனை நடைபெறும். செல்லும் வழியில் வீட்டில் நின்றுகொண்டு பல்லக்குகளை எதிர்கொண்டு அழைப்பர். இறைவன் தம்மைத் தேடி வரும்போது அவனுக்காகக் காத்திருப்பதையும், இருந்த இடத்திலிருந்தே வழிபாடு செய்வதையும் மிகவும் வாஞ்சையோடு மக்கள் செய்வார்கள்.

பிற சப்தஸ்தானங்கள்

திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தான விழா நடப்பதைப் போல தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. அவை சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம், கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர் சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகும். 

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் அண்மைக்காலமாக நடைபெறவில்லை என்பதை அறியமுடிந்தது.

கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். 

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டைதாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்
 தாராசுரம்திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், 
திருவலஞ்சுழிகும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், 
கொட்டையூர்மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில், மேலக்காவேரிசுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை

வெள்ளி, 5 மே, 2017

உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத இறைவன் தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட வைபவம்.

உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத இறைவன் தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட வைபவம்.



அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர்












திருவையாறு சப்தஸ்தான சித்திரைப் பெருவிழாவின்  ஐந்தாம் திருநாள் வைபவம், இன்று 04/05/2017

மாலை 5 மணிக்கு தொடங்கி ஐயாறப்பர் தன்னைத்தான் பூஜித்தல் சிறப்பாக நடைபெற்றது , ஆறூர் சுவாமிகள் வருகை, தற்போது இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சன்னதி முன் சைவைகளுக்கு மாகேசுவர பூஜை செய்தல், பஞ்ச மூர்த்திகளும் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளல் , சதுர்முகச்சப்பர வீதியுலாக் காட்சி நடைபெறுகிறது.

அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர்ருடன்ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள். இந்த காட்சியின் நோக்கம், காளை (ரிஷப) வாகனம் தர்மத்தை குறிக்கும். காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமையைத் தாங்கும் காளைப் போல தன்னம்பிக்கை, மனிதர்க்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறைவன் நாமத்தையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும். காளையின் வாழ் போல் தீயவையை புறம் வைக்க வேண்டும் என்று உணர்த்தவே இந்தகாட்சி...

புதன், 3 மே, 2017

மூன்றாவது உலக போர் வருவதை மூன்கூட்டி எச்சரிக்கை செய்யும் சிவன் மலை ஆண்டவர்


மூன்றாவது உலக போர் வருவதை மூன்கூட்டி எச்சரிக்கை செய்யும்
சிவன் மலை ஆண்டவர்
சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை  வைத்து பூஜை

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843


சிவன்மலை சுப்பிரமணிசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

காங்கேயம் சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று 03.05.2017 முதல் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை இந்த பெட்டிக்குள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம்.
ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843
இந்த முறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார்.

பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என இரண்டு பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். பின்னர் அதற்கு தினமும் பூஜை செய்யப்படும்.

உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் கிடையாது. மற்றொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படும். இவ்வாறு, உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்தப் பொருள் நாட்டில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அதன்படி, இதற்கு முன் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை உலக உருண்டை வந்து உள்ளது .
இது மூன்றாவது உலக போருக்கு அறிகுறி யா என தெரியவில்லை.
எல்லாம் சிவமயம்.

திங்கள், 1 மே, 2017

வெற்றி தரும் விநாயகரின் 16 வடிவங்கள்

வெற்றி தரும் விநாயகரின் 16 வடிவங்கள்





வெற்றி தரும் விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதன் மூலம் சிறப்பான பலன்கள் நம் வாழ்வில் உண்டாகும்.

1. பாலகணபதி:

மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

2. தருண கணபதி:

பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக் கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

3. பக்த கணபதி:

தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன்

காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறைவழிபாடு உபாசனை நன்கு அமையும்.

4. வீர கணபதி:

தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, கோபத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

5. சக்தி கணபதி:

பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்துார வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

6. துவிஜ கணபதி:

இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

7. சித்தி கணபதி:

பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி

ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பென் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. இவரை வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

8. உச்சிஷ்ட கணபதி:

வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

9. விக்னராஜ கணபதி:

சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்ரம், தந்தம், நெற்கதிர், சரம்

ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்

குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

10. க்ஷிப்ர கணபதி:

கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

11. ஹேரம்ப கணபதி:

அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடரி, இரும்பினாலான உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய

ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் உண்டாகும்.

12. லட்சுமி கணபதி:

பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு

தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை

வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

13. மகா கணபதி:

பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14. புவனேச கணபதி:

விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு

வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

15. நிருத்த கணபதி:

மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதிரம் ஜொலிக்கும் ஆறாவது கையான துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் ஆனந்த நடனமாடும் இவர் நர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

16. ஊர்த்துவ கணபதி:

பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர்.பச்சை நிற மேனியுடன் விளங்கும் தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால்

இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

திருச்சிற்றம்பலம்