சனி, 6 மே, 2017

சப்தஸ்தானம் கோவில்கள் என்றால் என்ன ? அதன் சிறப்புகள்

சப்தஸ்தானம் கோவில்கள்  என்றால் என்ன ?  அதன் சிறப்புகள்


சப்தஸ்தானம் என்பது ஏழு இடங்கள் என்று பொருள்படும். ஏழு ஊர்களைக் குறிக்கவும் அச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானம் எனப்படும் ஏழு இடங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.






பெயர் விளக்கம்

சப்த + ஸ்தானம் என்றால் ஏழு புனித இடங்கள் என்றும் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் கோயில்களுடன் தொடர்புடைய சொல்லாக இச்சொல் பயன்படுத்தப்படுவதால் புனிதத் தலங்கள் என்றும் சப்தஸ்தானத் தலங்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நந்திதேவர் விழா

சப்தஸ்தான விழாவிற்கு முன்னதாக நடைபெறும் நந்திதேவர் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் அதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது.

 அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளுவதும் திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவிற்கு திருமழபாடியிலிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்லுவதும் மரபாக இருந்து வருகின்றது. 

இந்த திருமண வைபவத்தை நேரில் காணும் கல்யாணமாகாத வரன்களுக்கு உடனடியாக திருமண பிராப்தி வாய்க்கும் என்பதும் அக்காரணத்தில்தான் இப்பகுதியில் "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்" என்ற சொல் வழக்கும் நிலவி வருகிறது.

சப்தஸ்தான விழா

சப்தஸ்தான விழா அல்லது ஏழூர்த் திருவிழா என்பதானது ஏழு ஊர்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா ஆகும். இவ் விழா தஞ்சாவூர்மாவட்டத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவாகும். 
இத்திருவிழா பெரும்பாலும் சைவக் கோயில்களோடு தொடர்புடையதாக உள்ளது. இவ்விழாவின் போது ஒரு கோயில் முதன்மைக் கோயிலாக அமைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அமைவது தொடர்புடைய கோயில்களுக்கு அந்தந்த பல்லக்குகள் சென்றுவரும் நிகழ்வாகும். 

ஒவ்வொர் ஆண்டும் குறிப்பிட்ட நாளில் முதன்மைக் கோயிலிலிருந்து பல்லக்கு கிளம்பி பிற ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, நிறைவாக கிளம்பிய தலமான முதன்மைக் கோயிலுக்கு வந்து சேருவது மரபாக உள்ளது. முதன்மைக் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அக்கோயிலைச் சார்ந்த இறைவனும், இறைவியும் உலா வருகின்றனர்
.          

                       ........                                                        திருப்பழனம்



அங்கிருந்து பிற தலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த கோயிலிலுள்ள பிற இறைவனும், இறைவியும் உள்ள பல்லக்குகள் சேர்ந்துகொள்கின்றன.

பலதரப்பட்ட மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினைக் காண அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் வருவதால் ஒரு சமூகப் பண்பாட்டுப் பிணைப்பு ஏற்படுகிறது. 

வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுக்கின்றனர். அந்தந்த ஊர்களில் தம் வீட்டு விழாவினைப் போல ஈடுபாட்டோடு மக்கள் கொண்டாடுகின்றனர்.

திருவையாறு

தமிழகத்தில் நடைபெறும் சப்தஸ்தானத் திருவிழாக்களில் முக்கியமானது திருவையாறுசப்தஸ்தானம் ஆகும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருந்துஅலங்கரிக்கப்பட்டப் பல்லக்கில் இறைவனும், இறைவியும் உலாக் கிளம்பி, தொடர்புடைய கீழ்க்கண்ட ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு இறுதியாக திருவையாற்றுக்குத் திரும்புவர்.

திருவையாறு ஐயாறப்பர் கோயில்
திருப்பழனம்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
திருக்கண்டியூர்
திருப்பூந்துருத்தி
திருநெய்த்தானம்

                             .                                     ஸ்ரீ அக்ஷயபுரீஸ்வரர் - அன்னபூரணி திருச்சோற்றுத்துறை

கடைசித்தலமான திருநெய்த்தானம் எனப்படும் தில்லைஸ்தானத்தில் இரவு வாண வேடிக்கையுடன் விழா சிறப்புற நடைபெறும். திருவையாற்றில் இறைவனுக்குப் பூப்போடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறும். திருமுறைகள் ஓதிக்கொண்டு பல்லக்குடன் பக்தர்கள் செல்வர். செல்லும் இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்க்கவும், தொடர்ந்து நடக்கும் அவர்களுக்கு சோர்வு தெரியாமல் இருக்கவும் பானகம் போன்ற பானங்களை ஆங்காங்கே வழங்கப்படுகிறது. பல இடங்களில் அன்னதானமும் நடைபெறும். காலையில் கிளம்ப ஆரம்பித்தால் மறுநாள் காலை வரை இந்த இறைவனோடு உடனாட உலா நடைபெறும். செல்லும் இடங்களில் பல்லக்கில் உள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்புப் பூஜைகள், கற்பூர ஆராதனை நடைபெறும். செல்லும் வழியில் வீட்டில் நின்றுகொண்டு பல்லக்குகளை எதிர்கொண்டு அழைப்பர். இறைவன் தம்மைத் தேடி வரும்போது அவனுக்காகக் காத்திருப்பதையும், இருந்த இடத்திலிருந்தே வழிபாடு செய்வதையும் மிகவும் வாஞ்சையோடு மக்கள் செய்வார்கள்.

பிற சப்தஸ்தானங்கள்

திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தான விழா நடப்பதைப் போல தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான விழா நடைபெறுகிறது. அவை சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், மயிலாடுதுறை சப்தஸ்தானம், கும்பகோணம் சப்தஸ்தானம், கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், திருநல்லூர் சப்தஸ்தானம், திருநீலக்குடி சப்தஸ்தானம், கஞ்சனூர் சப்தஸ்தானம், நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகும். 

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் அண்மைக்காலமாக நடைபெறவில்லை என்பதை அறியமுடிந்தது.

கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணத்தை மையமாகக் கொண்டு கும்பகோணம் சப்தஸ்தான விழாவில் தொடர்புடைய தலங்கள் கீழ்க்கண்டவையாகும். 

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டைதாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில்
 தாராசுரம்திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், 
திருவலஞ்சுழிகும்பகோணம் கோடீஸ்வரர் கோயில், 
கொட்டையூர்மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில், மேலக்காவேரிசுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில், சுவாமிமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக