திங்கள், 22 மே, 2017

சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத் துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து எடுத்துச் சென்ற காட்சி

சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத் துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து எடுத்துச் சென்ற காட்சி

சன்னிதானத்தில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த கொடிமரத்தின் கீ்ழ்பகுதியில் சேதம் அடைந் துள்ளது.








எனவே, அதற்குப் பதிலாக ரூ.3.50 கோடியில் புதிதாக தேக்கு மரத்தில் கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதற்காக கோந்தி வயக்கரை வனப்பகுதியில் இருந்து 45 அடி நீளம், 135 செ.மீ. சுற்றளவு கொண்ட 64 வயதுடைய தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மரம் பம்பைக்கு கடந்த ஆண்டு செப் டம்பரில் கொண்டுவரப்பட்டது.


ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843


ஜூன் 25-ல் புதிய கொடிமரம்

இதனிடையே, புதிய கொடி மரத்தை நிறுவுவதற்காக பழைய கொடிமரம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பீடம் அமைக்கப்பட் டுள்ளது. ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படு கிறது. இந்நிலையில், பம்பையில் எண்ணெய்க் காப்பில் உள்ள கொடிமரத்தை சந்நிதானம் வரை தோளில் சுமந்து வரும் பொறுப்பு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதில், ஐயப்ப சேவா சங்கத் தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சேர்ந்து மே 22-ம் தேதி புதிய கொடிமரத்தை பம்பையில் இருந்து சந்நிதானம் வரை தோளில் சுமந்து செல்வது என முடிவு செய்யப்பட் டுள்ளது.

20 நாட்கள் விரதம்

 மே 22-ம் தேதி புதிய கொடிமரம் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம் வழியாக சந்நிதானத்துக்குக் கொண்டுசெல் லப்படும்.

ஶ்ரீவள்ளி ஆன்மீக ஜோதிட நிலையம்   whats app group 0091-8939791843.

22-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் சந்நிதானத்துக்கு கொடிமரத்தைக் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளோம். கொடிமரம் முழுவதும் தங்கத் தகடு வேயப்பட்டு பீடத்தில் நிறுத்தப்படும்
ஓம் சுவாமியே சரணம்
நன்றி பூலோக சொர்க்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக