திங்கள், 13 மார்ச், 2017

காரடையான் நோன்பு அடை செய்யும் முறை

 காரடையான் நோன்பு
அடை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா

இதோ
*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843
வெல்ல அடை,உப்புஅடை
(காரடையான் நோன்பு ) செய்முறை

14.3.2017 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.

அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.

முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.

வாசனை வரும்வரை வறுக்கவும்.

--

வெல்ல அடை:

தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்

காராமணி 1/2 கப்

தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்

வெல்லம் (பொடித்தது) 1 கப்

ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

தண்ணீர் 2 கப்

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.

வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர்
"தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.

வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.

மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:

தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்

காராமணி 1/2 கப்

தேங்காய் துண்டுகள் 1/2 கப்

தண்ணீர் 2 கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1

ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு,

எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,
கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் நன்கு கொதித்தவுடன்
வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள்
சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.

மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

அடை ரெடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக