செவ்வாய், 7 மார்ச், 2017

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் Kumbakonam Chakrapani temple

Kumbakonam Chakrapani- Kumbakonam திருக்குடந்தை சக்கரபாணி

  அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்
மூலவர்:சக்கரபாணி
 தாயார்:விஜயவல்லி தாயார்
தீர்த்தம்:மகாமக குளம்  - ஊர்:கும்பகோணம் மாவட்டம்:தஞ்சாவூர்
 ஆன்மீகதகவல்கள்.

   திருவிழா:   மாதம்தோறும் மகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் கருடசேவை நடக்கும் அட்சய திரு தியை அன்றும், ரத சப்தமி அன்றும் திருக்கல்யாணம் நடத்தப்படும் வைகாசி விசாகத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

  தல சிறப்பு:  இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
முகவரி:அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.  

   சக்கரபாணி சன்னதியின் வடபுறம் விஜயவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இவர்களைத்த விர தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோரும் காட்சியளிக்கின்றனர்.      சகல தோஷமும் விலக, திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.  






  தலபெருமை:

மகாமக கோயில்கள் பதினாறையும் தரிசித்து மகாமக குளத்திலும் பொற்றாமரை குளத்திலும் காவிரியிலும் நீராடி தீர்த்தம் பெற்று அனைத்து பாவங்களையும் கழுவி வந்திருப்பவர்கள், இதனால் மிகப் பெரிய புண்ணியத்தை பெற்று விட்டோம், நம்மை யாராலும் அசைக்க முடியாது என எண்ணி விடாதீர்கள். ஏனெனில் மகாமக தீர்த்தத்தில் ஆடிய பலன் உங்களுக்கல்ல, சக்கரபாணி தெய்வத்திற்கு உரியது. இந்த பலன்கள் அனைத்தையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் சக்கர பாணி கோயில்.


காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய இடத்தை இப்போது சக்கரதீர்த்தம் என்றும் சக்கர படித்துறை என்றும் அழைக்கிறார்கள். சூரியன் இத்தலத்து மூர்த்தியிடம் சரணாகதி அடைந்தால் நவகோள்களால் வரும் அனைத்து துன்பங்களும் நீங்கும் ஏழரைச்சனி அஷ்டமத்து சனி ராகு தசை கேது தசை ஆகியவற்றால் அல்லல்படுவார்கள் சக்கரராஜனை வணங்கி துன்பம் நீங்கப் பெறலாம். இக்கோயிலை பக்தியுடன் பிரதட்சணம் செய்தால் திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளி இருப்பதால் பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வஅர்ச்சனையும் செய்யப்படுகிறது சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அக்கினிபகவான் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். சுதர்சன ஹோமத்தை இத்தலத்தில் செய்தால் மிகுந்த நலன் தரும். கோயிலுக்குள் உள்ள அமிர்தபுஷ்கரணி தீர்த்தம் காசியை விட மகிமை கூடியது சுதர்சனவல்லி தாயாருடன் சக்கரராஜன் அருள்புரிகிறார்.


மகாமக புண்ணியம் அனைத்தையும் சக்கரத்தாழ்வாரிடம் சமர்பித்து விட வேண்டும். சூரியன் தன்னை பெரிதாக கருதி அழிந்து போனது போல புண்ணியம் பெற்ற நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற கர்வத்துடன் கும்பகோணத்தைவிட்டு வெளியேறக்கூடாது. அனைத்தும் சக்கரராஜனுக்குள் அடக்கம் என்பதை உணர்ந்து அவரிடமே புண்ணியத்தை ஒப்படைத்துவிட வேண்டும் அவர் தேவையான நேரத்தில் தேவையானதை தந்து அருள்புரிவார்.
கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும்.



சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.

படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.

ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.

கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ராகு திசை, கேது புத்தி, சர்ப்ப தோஷங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சக்கரபாணி சுவாமியை வழிபட இன்னல்கள் மறையும்.





    தல வரலாறு:    ஜலந்தராசுரன் என்பவனை அழிக்கும் பொருட்டு சாரங்க பாணி சுவாமியால் அனுப்பப்பட்ட திருச்சக்கரம் பாதாள உலகத்தில் இருந்த அசுரர்களை அழித்து காவிரியில் பூமியை பிளந்துகொண்டு வெளிக்கிளம்பி வந்தது. புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கையில் வந்து அமர்ந்தது.மகிழ்ச்சி அடைந்த பிரம்மன் ஸ்ரீசக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான் இந்த சக்கரம் சூரியனை விட அதிக ஒளிமிக்கதாக இருந்தது. இதனால் சூரியன் பொறாமை கொண்டான். தன்னைவிட ஒருவன் அதிகமாக ஒளிர்வதா என்ற ஆவேசத்தில் தனது ஒளியை மேலும் கூட்டினான். உடனே சக்கரம் அவனது ஒளியையும் பறித்து தன்னுள் அடக்கிகொண்டது. சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்ற வனாகவும் ஆனான். ஒளியிழந்த சூரியன் தனக்கு மீண்டும் ஒளி கிடைக்க ஸ்ரீசக்கரத்தை சரணடைந்தான். வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னிமயமான கேசத்துடனும் ஸ்ரீசக்கரராஜன் அருட்காட்சி தத்தார். சூரிய னுக்கு ஒளி கிடைத்தது. இந்த நன்றிக்காக சக்கரராஜனுக்கு கோயில் கட்டினான் சூரியன்.    சிறப்பம்சம்:   அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார்.
 https://www.facebook.com/aanmeegathagavalgal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக