புதன்கிழமை வணங்கினால் கல்விச் செல்வம்! ஆன்மீகதகவல்கள்
நம் மனதுள் கலையையும் அவற்றை அறிந்து உணரும் ஞானத்தையும் தருபவர் புதன். அப்பேர்ப்பட்ட புதனுக்கு அருளியவர் ஸ்ரீஆதிசொக்கநாதர். இவர் குடியிருக்கும் திருவிடத்தை, புதன் க்ஷேத்திரமாகப் போற்று கின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத் தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஆதிசொக்கநாதர் கோயில். அம்பிகை - ஸ்ரீமீனாட்சி அம்பாள்.!
மன்னன் வைகை கரைக்கு ஓடி வந்தான். 'என்ன குற்றம் செய்தேன் இறைவா?’ எனக் கதறினான். 'இடைக்காடருக்கு இழைத்த அவமானத்தால் நான் இங்கு வந்துவிட்டேன்’ என அசரீரி கேட்க... மன்னன், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து, மன்னிப்பு வேண்டினான். அவனுக்கு இறைவியுடன் காட்சி தந்த சிவனார், மீண்டும் ஆலயத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, இடைக்காடரைச் சிறப்பு மரியாதை செய்து சபைக்கு அழைத்து வந்து பாடலை அரங்கேற்றினான் மன்னன் என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கு வந்து வழிபட கல்வி- கலைகளில் சிறந்து விளங்கலாம் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீதுர்கை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உண்டு. புதன்கிழமைகளில் வழிபடுவது விசேஷம்! ஆன்மீகதகவல்கள 0091-8939791843
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக