ஞாயிறு, 26 மார்ச், 2017

முளைப்பாரி திருவிழா அதன் சிறப்புகள்

முளைப்பாரி திருவிழா அதன் சிறப்புகள்



#அருள்மிகு முத்து மாரியம்மன் திருவிழா மதுரை



#முளைப்பாரி (அங்குரார்பனம்)

சூரிய வெயில் அதிகம்படாத இடத்தில் வளர்க்கப்படுகிறது. பொதுவாக இது ஒன்பது தானியங்களைக் கொண்டு இரண்டு வாரங்களுக்குள் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் பெண்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது.




தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

ஒன்பது வகையான சுத்தமான தானியங்கள்
நெல்,
பச்சைப்பயிறு,
அவரை,
கொள்ளு,
கோதுமை,
உளுந்து,
எள்ளு,
கம்பு,
ஆரியம்
மண்
மண்பாண்டம்
நீர்
சாணம்

முறை
மண்பாண்டம் அல்லது பாத்திரத்தில் மணலையும் சாணத்தையும் கலந்துகொள்ள வேண்டும்


கொஞ்சம் தண்ணீர் தெளிக்க வேண்டும்
ஒன்பது வகையான தானியங்களை அந்த கலவையில் தூவ வேண்டும்
பின்னர் வெயில் படாத வகையில் ஒரு கூடையோ அல்லது துணியோ அல்லது வைக்கோல் கொண்டு மூடி விட வேண்டும்
தினமும் சிறிது நேரம் வெயில் படுமாறு திறந்து வைக்க வேண்டும் மேலும் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க வேண்டும்
பொதுவாக 2 வாரங்களில் அல்லது ஒன்பது நாட்களில் இவை முளைத்து விடும்.

முளைப்பாரி பாடல்கள்

நாட்டுப்புற வழிப்பாடல்களில் முளைப்பாரிப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய பாடலின் சில வரிகள் கீழே

"நல்ல தண்ணீர் எடுத்து வந்து
நாங்கள் முளை போட்டோம்
சிவ பாலரெல்லாம் போட்டோம்
போட்ட முளை பழுதில்லாமல்
பொங்கி நல்லா வளர"

"சீர்துவரை நேர் நிறைத்து
புறுமணிப்பயர் உளுந்து கலந்து
நல்ல தினுசு அவரை நிறைத்து
வெள்ளை சிவப்பு பச்சை கலந்து
நவ தானியம் ஒன்பதும் கலந்து
போட்ட முளை பழுதில்லாமல்
பொங்கி நல்லா வளர"




முளைப்பாரி பாடல்
முளைப்பாரி பாடல்
தானானை தானானை தானானை தானானை

வேளாருகிட்டச் சொல்லி கோளாறா ஓடொடச்சு
வட்டவட்ட ஓடொடச்சு குட்டமுள்ள முளைப்பயறு
ஆட்டாந்தொழு தெறந்து ஆட்டெருவு அள்ளிவந்து
மாட்டாந்தொழு தெறந்து மாட்டெருவு அள்ளிவந்து

கடுகுலயுஞ் சிறுபயறு காராமணிப் பயறு
மிளகுளயுஞ் சிறுபயறு முத்தான மணிப்பயறு
மொளபோட்ட ஒண்ணா நாளு ஓரெலையாம் முளைப்பாரி
ஓரெலைக்குங் காப்புக் கட்டி ஒருபானை பொங்கலிட்டு
முளைப்பாரி போடுங்கம்மா முத்தாலம்மனைப் பாடுங்கம்மா
தானானை போடுங்கம்மா தையலரே ஒருகுலவை



#பண்பாடு
முளைப்பாரி வளர்ப்பதற்கு நல்ல நாள் நேரம் பார்த்து நாள் உறுதி செய்யப்படுகிறது. பொதுவாக இது மேல்நோக்கு நாளாக இருக்க வேண்டும்
பெண்கள் வளமையின். குறியீடாகத் திகழ்வதனால் முளைப்பாரி பெண்கள் போடுகின்றனர்
முளைப்பாரி ஊர்த் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக