வியாழன், 9 மார்ச், 2017

ஷீரடி சாயி பாபாவின் அருளுரை*ஆன்மீக தகவல்கள்*

_*ஆன்மீக தகவல்கள்*_
~~~~~~~~~~~~~~~~~~
சாய்பாபாவின் அமுத மொழி



அன்பும் ,கருணையும் உள்ள சாயிபாபா பலமுறை கீழ்கண்ட மொழிகளை மசூதியில் கூறியிருக்கிறார்.
"என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ,அவன் எப்போதும் என்னைக் காண்கிறான்.என்னைவிட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது.
எனது கதைளைத்தவிர பிறவற்றைக் அவன் கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து என் நாமத்தையே அவன் ஸ்மரணம் செய்கிறான்.
முழுமையாக தன்னை என்னிடம் சமர்பித்து என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன்.அவனுக்கு விடுதலையை(தன்னை உணர்தல்)
அளித்து எனது கடனைத் தீர்ப்பேன்.
என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல்உண்ணாதவன்பாலும் நான் சார்ந்து இருக்கிறேன்.இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு,கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான்.
பெருமையையும், அஹங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளள அனைவருக்கும் வும் அவற்றின் அடையாளம் கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தேஅமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பிப்பீர்களாக!"



ரடளுடைய சாதுரியமான வாதங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். அதற்குப் பதிலாக, "சாயி சாயி" என்று ஸ்மரணம் செய்யுங்கள். என்னுடைய சரித்திரத்தைப் படியுங்கள். இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது. இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்தால் மட்டுமே என் கதைகளைக் கேட்கவேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் வரும்.

ஓம் சாய் ராம்.
"ஸ்ரீ சாயியைப் பணிக சாந்தி நிலவட்டும் ".
*0091-8939791843*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக